மன அழுத்தம் குறைய வேண்டுமா? அதற்கான சிறந்த வழிகள் இதோ

இன்றைய கால கட்டத்தை பொருத்தவரையில் மன அழுத்தம் என்பது நம் வாழ்வில் ஒரு சளி இருமல் போல வந்து கொண்டுதான் இருக்கின்றது. மன அழுத்தம் இல்லாதவர்களே இருக்க முடியாது. 

எவ்வாறுதான் இந்த மன அழுத்தம் இருந்தாலும் அதை குறைத்து நம் வாழ்வில் நாம் ஆரோக்கியமாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மன அழுத்தத்தை குறைக்க நாம் என்ன வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் இங்கு பார்ப்போம்.

✅சுவிங்கம் சாப்பிடுதல்

மன அழுத்தத்தில் இருக்கும்போது ஒரு சுவிங் கம்மை வாயில் போட்டு மென்றுக் கொண்டே இருங்கள். இது அழுத்தத்தில் இருந்து விடுபட்டு மனதை அமையாதிக்கும். அதுமட்டுமல்லாமல், நாம் மெல்லும்போது சுவிங் கம் மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதனால் மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் குறைந்து மகிழ்ச்சி ஹார்மோனான எண்டார்பின் அதிகரிக்கும்.

✅மூச்சு பயிற்சி

மன அழுத்தத்திற்கு உடனடி நிவாரணமே இந்த மூச்சிப்பயிற்சி தான். பதட்டமாகவும், டென்ஷனாகவும் இருக்கும்போது நம்மால் ஆழமாக சுவாசிக்க முடியாது. இதனால், மன அழுத்தம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். எனவே, எப்போதெல்லாம் டென்ஷான பதட்டமாக உணருகிறீர்களோ, அந்த சமயத்தில் கண்களை முடிக்கொண்டு, ஆழமாக மூச்சை உள்ளே மெதுவாக வெளியேவிடவும். இப்படி 3-5 நிமிடங்கள் செய்தாலே போதும் உடனடியாக அழுத்தம் குறைந்துவிடும்.

✅அமைதியான இடத்தில் நடத்தல்

எப்போதெல்லாம் மன அழுத்தத்தை உணருகிறீர்களோ அப்போது அமைதியான ஒரு இடத்திற்கு சென்றுவிடுங்கள். அது இயற்கையான சூழலாக இருந்தால் இன்னும் நல்லது. எந்த சிந்தனையும் இல்லாமல், மூச்சிக் காற்றின் மீது மட்டும் கவனம் செலுத்தி 5 நிமிடங்கள் நடந்து பாருங்கள். காலில் செருப்பு போட வேண்டாம். டென்ஷன் படிப்படியாக குறையும்.

✅​உடற்பயிற்சி

அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாக இருக்கும்போது நம்மையே அரியாமல் பதட்டம், கோபம், எரிச்சல் அடைவோம். ஆனால், வாரத்தில் 5 நாட்களாவது குறைந்தது அரை மணி நேரம் எளிமையான உடற்பயிற்சி செய்வது, மூளையில் எண்டோர்பின் மகிழ்ச்சி ஹார்மோன்களை இயற்கையாக அதிகரிக்கும்.

✅நன்றாக தூங்குதல்

தினமும் நிம்மதியாக தூங்கி எழுந்தாலே பாதி டென்ஷனை குறைத்துவிட முடியும். ஏனென்றால், இரவில் நன்றாக தூங்காமல் இருந்தால் மறுநாள் எதை பார்த்தாலும் வெறுப்பு, எரிச்சல், கோபம் தான் வரும். இது மன அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். தூக்கமின்மையும், மன அழுத்தமும் இருந்தாலே பாதி வாழ்நாளை குறைத்துவிடும். எனவே, தினமும் இரவில் 7-8 மணிநேரம் கண்டிப்பாக தூங்குங்கள்.

✅சிரித்தல்

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்வார்கள். அது உண்மை தான். யார் தினமும் அதிகமாக சிரிக்கிறார்களோ அவர்களை மன அழுத்தம் அவ்வளவு சீக்கிரம் நெருங்காது. எனவே, டென்ஷானாக இருக்கும்போது காமெடி படங்கள் பார்ப்பது, நண்பர்களுடன் பேசுவது போன்றவற்றில் கவனத்தை திசைத்திருப்புங்கள்.

✅டீ, காபி குடித்தல்

டீ, காபி குடிப்பது புத்துணர்ச்சியை அளித்தாலும், அதே நேரத்தில் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். சிலர் டென்ஷனாக இருக்கும்போது டீ, காபி குடிப்பார்கள். இது மன அழுத்தத்தை அதிகமாக்குமே தவிர குறைக்காது. காஃபினும், மன அழுத்தமும் சேர்ந்து மூளையில் கார்டிசோலின் ஹார்மோனை அதிகரிக்கும். எனவே, டென்ஷனாக இருக்கும்போது நோ டீ, காபி. அதேபோல், ஒருநாளைக்கு 2 கப் மட்டும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள். அதிகமாக வேண்டாம்

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.