சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சாப்பிடவே கூடாதா?

சர்க்கரை நோய் பிரச்சனையானது தற்போது வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வருகிறது. இந்நோய்க்கு மக்கள் அதிகளவில் பலியாகி வருகின்றனர்.

நீரிழிவு நோயால் பல நோய்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.

நீரிழிவு ஒரு நாள்பட்ட நோய் ஒருமுறை பாதிக்கப்பட்டால், அதிலிருந்து முழுமையாக மீள முடியாது. இருப்பினும், வாழ்க்கை முறை மற்றும் உணவை மாற்றுவதன் மூலம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.  

நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்துகளை உட்கொள்வதுடன், சர்க்கரை அளவை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும்.

பெரும்பாலும், நீரிழிவு நோயாளிகள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் சர்க்கரை நோயில் சர்க்கரையை சிறிய அளவில் சாப்பிட வேண்டுமா அல்லது முற்றிலும் தவிர்க்க வேண்டுமா? என்ற சந்தேகம் பலரிடமும் உள்ளது. அது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

சில நோயாளிகளுக்கு ஒரு சிறிய அளவு சர்க்கரை பொருந்தும். 

சில நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு சில நேரங்களில் அதிகரிக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு சர்க்கரை பரிந்துரைக்க முடியாது.

இது உங்கள் உடல் வகை, எடை, பிற சுகாதார நிலைமைகள் போன்றவற்றை உள்ளடக்கி எடுக்க வேண்டிய முடிவாகும்.

எப்போதாவது சில அளவுகளில் சர்க்கரையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், நீங்கள் சரியான நேரத்தில் மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

சந்தையில் கிடைக்கும் சர்க்கரை பானங்களை முற்றிலும் தவிர்க்கவும்.

ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், நார்ச்சத்து மற்றும் முழு தானியங்களை தினமும் எடுத்துக்கொள்ளவும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இனிப்புகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க முடியாது. சர்க்கரைப் பொருட்களை எப்போதாவது மற்றும் மிகச் சிறிய பகுதிகளாக உட்கொள்ளவும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.