வேலை உலகிற்கு தயார்படுத்தல் தொடர்பான தேர்ச்சியின்‌ நடைமுறையும் சவால்களும்

 

தேர்ச்சி என்பது ஒரு பொருள் அல்லது சாதனைகளில் விரிவான அறிவு அல்லது திறன் ஆகும். மேலும் தேர்ச்சி என்பது அறிவு, திறன், மனப்பாங்கு, விழுமியங்களில் பிள்ளை அடைய வேண்டிய பாண்டித்திய தேர்ச்சியாகும்.

அந்த வகையில் இலங்கை அரசனது கல்வியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏழு வகையான தேர்ச்சிகளை அறிமுகம் செய்துள்ளது

• 01.தொடர்பாடல் தேர்ச்சி

• 02 ஆளுமை தொடர்பான தேர்ச்சி

• 03. வேலை உலகிற்கு தயார்படுத்த தொடர்பான தேர்ச்சி

• 04.சூழல் தொடர்பான தேர்ச்சி

• 05. கற்றலுக்கு கற்றல் தொடர்பான தேர்ச்சி

• 06. சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சி

• 07. ஓய்வு நேரத்தை பயன்படுத்துதல் தொடர்பான தேர்ச்சி

இவ்வாறான ஏழு வகையான தேர்ச்சிகளை அறிமுகம் செய்துள்ளனர்

அந்த வகையில் இத்தேர்ச்சிகளில் சிறப்பு வாய்ந்த தேர்ச்சியாகவும் மற்றும் அனைத்திற்கும் பொதுவான தேர்ச்சியாகவும் தொடர்பாடல் தேர்ச்சி காணப்படுகின்றது

வேலை உலகிற்கு தயார்படுத்துதல் தொடர்பான தேர்ச்சி என்பது பற்றி நோக்குவமாயின்

இன்றைய கல்விமுறையில் அவதானிக்கக்கூடிய பாரிய பிரச்சனையே வேலையில்லா பிரச்சினையாகும் படிப்புக்கேற்ற தொழிலின்மை ஊதியமின்மை படித்தவரை படிக்காதவர்கள் அதிகளவு சம்பளம் பெறுகின்றனர் போன்ற பல்வேறு பிரச்சனைகள் காணப்படுகின்றது பட்டதாரிகள் பலர் தொழில் இல்லாமல் காணப்படுகின்றனர் காரணம் தொழிற்சந்தைக்கு தேவையான உளச்சார்பு ஆளுமைத்திறன் மற்றும ஒழுகலாறு காணப்படாமையே ஆகும். எனவே இவ்வுலையில்லா பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியிடும் நோக்கிலே கல்வி இலக்குகளை அடைவதற்கு மூல காரணமாக உள்ள தேர்ச்சியில் ஒன்றான வேலை உலகிற்கு தயார் படுத்தல் தொடர்பான தேர்ச்சி உள்வாங்கி தற்கால மாணவ சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் கல்வியில் இத்தேர்ச்சி தொடர்பான ஆலோசனை வழங்கப்பட்டு இத்தேர்ச்சி தற்போது கல்வி நடவடிக்கைகளில் செயற்படுத்தப்படுகின்றது

வேலை உலகிற்கு தயார்படுத்தல் என்பது பற்றி நோக்குவமாயின் வேலை என்பது ஒருவர் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக வருமானத்தை ஈட்டுக் கொள்ளும் வகையில் அவரால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து கருமங்களும் வேலை எனப்படும் ஒருவர் அறிவு திறன் தகவல் அனுபவங்களை பயன்படுத்தி தொழில்துறைக்கு தயாராகுவார். எனவே இவ்வாறான செயற்பாடுகளுக்கு கல்வி மூலமே சிறந்த தீர்வினை காண முடியும் என்பதனால் கல்வியில் முன்வைக்கப்பட்ட தேர்ச்சிகளில் இத்தேர்சியும் பரிந்துரைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டில் வேலை உலகிற்கு தம்மை தயார் செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன அவையா அவன

• முறை சார்ந்த முறையில்

• தொழிற்கல்வி ஊடாகvocational education தயார் செய்யப்படுகின்றனர்

அந்த வகையில்பாடசாலை பல்கலைக்கழகம் நோக்குகையில் க.பொ.த சாதாரண தரம்மற்றும் க.பொ.த உயர்தரத்தை பூர்த்தி செய்துபல்கலைக்கழகம் கல்விய கல்லூரிமற்றும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்கள் ஊடாகபட்டப்படிப்பினைபட்டப் படிப்பினை மேற்கொண்டுதற்கால நவீன உலகிற்கு ஏற்ப தங்களுடைய திறன்களை வெளிப்படுத்திசுயமாக தானாகவே ஓர் தொழிலினைதொடரும்வித்தியாக்கப்படுவர்‌

தொழிற்கல்வி ஊடாகபாடசாலை கல்வியை பூர்த்தி செய்யாதவர்கள்இடை விலகியவர்கள்தங்களுடைய கற்றலை மேம்படுத்தும் நோக்கில்தேசியத் தொழில் தகைமை( National vocational qualification) ஊடாக தகைமைகளை பூர்த்தி செய்துதற்கால உலகிற்கு ஏற்பதங்களுடைய திறமைகளை வெளிப்படுத்துவர்.

  உலக வங்கி 2019 இல் எதிர்கால வேலை உலகிற்கான உலக அபிவிருத்தி அறிக்கையில் “தொழில்கல்வி மற்றும் பொதுக்கல்விக்கிடையிலான இணைவுத்தன்மை மாற்றமுறும் தொழிநுட்பத்தின் அதீத செல்வாக்கை கொண்டுள்ள தொழில் சந்தைக்கு ஏற்ப ஒவ்வொருவரையும் ஏற்புடையவர்களாக மாற்றுவதில் மிகமுக்கிய பங்குவகிக்கின்றது” இக்கருத்தானது பொதுக்கல்வி முறையில் தொழில்சார் கல்வியின் இணைவின் அவசியத்தை எமக்கு புலப்படுத்துகின்றது. வெறுமனே மனப்பாடம் செய்யும் கல்வி முறைக்கு மாறாக பயிற்சியுடன் கூடிய தொழில்கல்வி மாணவர்களுக்கு வழங்குவது அவர்களை சமூகத்தில் வினைத்திறன்மிக்கவர்களாக வாழ வழிவகுக்கும்..

அந்த வகையில் பாடசாலையினூடாக எவ்வாறு வேறு உலகிற்கு ஏற்ப தயார் செய்யப்படுகின்றது என்பதை நோக்குவோமாயின்

• தொழினுட்ப பாட‌அறிமுகம்

• 13 வருடஉத்திரவாதப்படுத்தப்பட்ட கல்வி முறையை கொண்டு வந்தமை

• STEAM EDUCATION கல்விமுறை அறிமுகம்

• ஆலோசணை வழிகாட்டி செயற்பாடுகளை மேற்கொள்ளல்

• தொழினுட்ப கல்லூரிகளை அமைக்கப்பட்டமை.

• களப்பயணங்களை மேற்கொள்ளல்

இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் 1893 இல் தொழில்கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் புகையிரத மற்றும் தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களை பயிற்றுவித்தலை பிரதான நோக்கமாகக் கொண்டது. நீண்டதொரு கல்வி வரலாற்றை கொண்ட இலங்கை பொதுக் கல்விக்கட்டமைப்பானது தொழில்கல்வியை மாணவர்களுக்கு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கையில் தொழில்கல்வி வரலாற்றில் 1893 இல் ஆரம்பிக்கப்பட்ட மருதானை தொழிநுட்பக்கல்லூரி தொழில்கல்வியை முறையாக வழங்குவதற்கு ஆரம்பிக்கப்பட்ட முதல் கல்லூரியாக விளங்குகின்றது.

   தற்போதைய காலகட்டங்களில் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள்

  தொழினுட்ப‌பாட அறிமுகம்

பாடசாலைக்கல்வி கட்டமைப்பில் தொழில்சார் திறன்களின் விருத்தி பிரித்தானியர் ஆட்சியிலும் பின்னர் சுதந்திரத்திற்கு பின்னரும் முக்கிய வளர்ச்சியைப் பெற்றுக்காணப்படுகின்றது. குறிப்பாக 1981 இல் முன்வைக்கப்பட்ட கல்விச்சீர்திருத்தத்தில் வெள்ளை அறிக்கையின் பிரதான கருப்பொருளாக விளங்கியது மாணவர் தொழில்சார் திறன்களின் விருத்தியாகும். இதன் ஓர் பிரதிபலிப்பே பாடசாலைக்கலைத்திட்டத்தில் வாழ்க்கைத்தேர்ச்சி (Life skill) என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாடசாலைக்கல்விக்கட்டமைப்பில் தொழிநுட்பபாடங்களானது 1930 இல் இருந்து வெவ்வேறு பெயர்கள் மற்றும் வடிவங்களில் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன அவற்றுள் வெடகுருவ, முன்தொழிற்கல்வி பாடநெறிகள், வாழ்க்கைத்திறன் அத்துடன் செயற்பாட்டு அறை போன்றன முக்கியமானவையாகும். மற்றைய முன்னெடுப்பாக செய்முறை மற்றும் தொழிநுட்பதிறன்களாக (PTS) 2007 இல் பொதுக்கல்விமுறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ் தொழிநுட்ப பாடங்கள் 6-11 வரையான வகுப்புக்களுக்கு கற்பிக்கப்படுகின்றன. PTS ஆனது தொழிநுட்பக்கல்வியின் ஐந்து பரந்த விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அவையாவன அடிப்படை தொழிநுட்பம், உணவுத்தொழிநுட்பம், ஆடைத்தொழிநுட்பம், விவசாயத்தொழிநுட்பம் மற்றும் வியாபார செயற்பாடுகள் என்பனவாகும். இவ் ஐந்து பிரிவுகளிலும் ICT உள்ளடக்கப்பட்டுள்ளது. PTS மூலமாக விசேடமாக மாணவர்களிடத்தில் பிரச்சினை தீர்க்கும் திறன்கள், தொடர்பாடல் திறன்கள், சிந்திக்கும் திறன்கள் விருத்தி செய்யப்பட்டன.

   உதாரணமாக

     விவசாய பாடத்தை கற்பதன்‌‌மூலம் எவ்வாறு பயிர்களை மேற்கொள்ளலாம் களைகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பயிர்களை பராமரிக்கும் முறைகள் போன்ற பல்வேறுப்பட்ட விடயங்களை விவசாய தொழில்நுட்ப பாடத்தை கற்பதன் மூலம் அது பற்றிய தகவல்களை மாணவர்கள் அறிந்து மனப்பாங்குகளில் மாற்றத்தினை ஏற்படுத்தி தாங்களையே ஒரு சுய தொழிலை மேற்கொள்ளும் அளவிற்கு தன்னை விருத்தி செய்து கொள்வர்.

மேலும் பாடசாலைக்கட்டமைப்பில் ஒன்பது தொழிநுட்ப பாடநெறிகள் தரம் 10-11 மாணவர்களுக்கு மூன்றாவது கூடையாக (Technical basket) அறிமுகம் செய்யப்பட்டு அதனுள் மாணவர்கள் ஒன்றை தெரிவ செய்தல் வேண்டும். அப்பாட நெறிகளாவன வடிவமைப்பு மற்றும் கட்டுமான தொழிநுட்பவியல், வடிவமைப்பு மற்றும் இயந்திரவியல் தொழிநுட்பவியல், வடிவமைப்பு மின்னியல் மற்றும் இலத்திரனியல் தொழிநுட்பவியல், கலை மற்றும் கைவினை, விவசாயம் மற்றும் உணவுத்தொழிநுட்பம், நீர்வாழ் உயிர்வள தொழிநுட்பவியல், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பவியல், வீட்டுப்பொருளியல் மற்றும் சுகாதாரம் மற்றம் உடற்கல்வி என்பனவாகும்.

  தற்போதைய காலகட்டங்களில் நீருயிரின வள தொழில் நுட்பம் என்ற புது வகை பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்களிடையே ஓர் விருத்தியை ஏற்படுத்தி உள்ளது.

தேசியகல்வி ஆணைக்குழுவின் 2009 இல் முன்வைக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2012 இல் மனித உரிமைகள் மற்றும் வேலைவாய்ப்பு அறிக்கை ஆகிய இரண்டும் பொதுக்கல்வித்துறையில் தொழில்சார் திறன்களின் விருத்தி தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தன. குறிப்பாக பொதுக்கல்வி மற்றும் தொழிநுட்ப மற்றும் தொழிற்கல்வி அத்துடன் பயிற்சி (TVET) ஆகியவற்றுடன் தொடர்பினைப்பேணல், பொதுக்கல்வியின் ஒவ்வொரு வெளியேறு மட்டங்களிலும் வெவ்வேறு தொழிற்கல்வி முறைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தல்இ கா. பொ.த சாதாரண தரத்தில் NVQ-1 இனை அறிமுகம்செய்தல், UNIVOTEC மூலமாக பாடசாலைகளில் தொழில்சார் திறன் விருத்திப்பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரியர்களை தயார் செய்தல் போன்றனவாகும்.

ஆலோசணை வழிகாட்டுதல் செயற்பாடுகளை மேற்கொள்ளல்

இலங்கை பாடசாலைக்கல்வியில் தொழில்கல்வியை வழங்கும் முயற்சியாக தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப்பிரிவு 1957 சுற்றறிக்கை இல 10 இன் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் 1970 ஆரம்பம் முதல் அதன் செயற்பாடு சரியாக இடம்பெறவில்லை. கல்வி அமைச்சு 1985 இல் தேசிய இளைஞர் சேவைமன்றத்தடன் இணைந்து தொழில் வழிகாட்டல் சேவையை ஓர் முன்னோட்ட நிகழ்ச்சித்திட்டமாக பாடசாலைகளில் அறிமுகப்படுத்தியது. இருந்தபோதிலும் இலங்கை பாடசாலைக்கடடமைப்பில் தொழில் வழிகாடடல் சேவையானது முழுமையானவகையில் சுற்றறிக்கை இலக்கம் 16/2006 அத்துடன் 06/2013 க்கு இணங்க கல்வி அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டது. “பாடசாலை வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சித்திட்டம்” என்ற பெயரில் அழைக்கப்பட்டது. பொதுவான வழிகாட்டல் ஆலோசனையுடன் எதிர்கால தொழிற்சந்தைக்கு ஏற்றவகையில் மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவது பிரதான நோக்கமாக காணப்பட்டது. இங்கு பெற்றோர்களுக்கும் மாணவர்களின் தொழில் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

 13. வருட உத்திரவாதப்பட்ட கல்வி முறை

மாணவர்களிடத்தில் தொழில்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விசார் செயற்திட்டமே பதிமூன்று வருடகால சான்றளிக்கப்பபட்ட கல்வித்திட்டமாகும். “இலவசக்கல்வியில் தொழில்சார் திருப்புமுனை” ( Professional turning point in free education) என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்டது. கா. பொ.த சாதாரணதரத்தில் உயர்பெறுபேறுகளை பெறாத மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்விசார் வாய்ப்பினை வழங்கும் செயன்முறையாகும். இத்திட்டமானது அறிவுசார் பொருளாதாரத்திறன் அடிப்படையில் உற்பத்தி, ஆக்கத்திறன் என்பவற்றில் உயிர்ப்பான பங்குபற்றலுக்ககாக இளைஞர்களை தயார்படுத்தும் திட்டமாகும். பரீட்சார்த்தமாக 42 பாடசாலைகளில் நடைமுறைபபடுத்தப்பட்டு இன்று அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்த கல்வியமைச்சு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

பதிமூன்றுவருட உத்தரவாதக்கல்வி மூன்று பிரதான இலக்குகளை அடிப்படையாகக்கொண்டுள்ளது

 1. அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தி

2. தொழிநுட்ப, தொழிற்துறை, சமூகத்திறன்களின் மேம்பாடு

 3. சுய அபிப்பிராயம் மற்றும் ஆளுமை விருத்தி என்பனவாகும். தொழில்சார் திறன் விருத்தி அடிப்படையில் 26 தொழில் முறைப்பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன அவற்றுள் உணவுபதப்படுத்தல் கல்வி, நீர்வளங்கல், உலோகக்கட்டுமான கல்வி, மென்பொருள் அபிவிருத்தி, அலுமினியம் கட்டுமானக்கல்வி அத்துடன் தோட்டக்கலை முதலான பாடங்களாகும்.

 இவ் செயற்றிட்டமானது தற்போதைய‌ காலங்களில் கிராமப்புறங்களிலும் அமுல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது

STEAM EDUCATION கல்வி முறை அறிமுகம்

எதிர்காலத்தில் நாம் சவால்களை வெற்றி கொள்வதற்கு STEAM கல்வி முறை அவசியமானதாகும். STEAM கல்வி முறை விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கலை, கணிதம், என பல துறைகளில் மாணவர்களை வேலை வாய்ப்புக்காகத் தயார்படுத்துகின்றது. விஞ்ஞானம் (Science), தொழில்நுட்பம் (Technology), பொறியியல் (Engineering), கலை (art), மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய துறைகளை இணைத்து பயன்படுத்தப்படும் கற்றலுக்கான கூட்டு அணுகு முறையாகும்.

21ஆம் நூற்றாண்டு கற்போனுக்குத் தேவையான பிரச்சினை தீர்க்கும் திறன் திறனாய்வுச் சிந்தனைத் திறன் போன்றவற்றைக் விருத்தி செய்வதற்கான கல்வி சார் மாதிரியாக STEAM கருதப்படுகின்றது. உலகின் 96 நாடுகளில் அமுல்படுத்தப்படும் STEAM EDUCATION கல்வி முறை

இலங்கையில் 2023.03.31 அறிமுகப்படுத்தப்பட்டது. மேல் மாகாணத்தை மையமாகக்கொண்டு STEAM கல்வி முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்றது.

 இவ்வாறாக ‌பாடசாலையினூடாக மாணவர்‌ சமூகத்தை தயார் படுத்துகின்றனர்.

 பாடசாலையில் இத்தேர்ச்சியை தொடர்வதில் ஏற்படும் சவால்களாக

• பயிற்றப்பட்ட ஆசிரியர் இன்மை

• கலைதிட்ட மாற்றத்தால் மாணவர்களிடையே ஏற்பட்ட அதிருப்தி

• ஆசிரிய பற்றாக்குறை

• பாடங்கள் பற்றிய‌‌ சரியான‌தெளிவின்மை

• பாடசாலை வளங்களை சரியான‌முறையில் பயன்படுத்தாமை

• வளப்பற்றாக்குறை

   இவ்வாறான‌ காரணங்களை கூறலாம்.

கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வியில் மாணவர்கள் எதிர்நோக்கு பிரச்சனைகளில் ஒன்றாக வளப்பற்றாக்குறை காணப்படுகின்றது. அரசாங்கத்தினால் ஒவ்வொரு பாடசாலைகளுக்குமென வளப் பகிர்வு இடம் பெற்றுக் கொண்டு வருகின்றது அந்த வகையில் சில பாடசாலைகளுக்கு பல பற்றாக்குறை ஏற்பட்டு கொண்ட வண்ணமே உள்ளது அதாவது அரசினால் கணினி அறைகள் ஆய்வுகூட வசதிகள் தளபாட வசதி இலத்திரனியல் உபகரணங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது இவ்வளங்கள் சில பாடசாலைகளுக்கு குறைவாகவே காணப்படுகின்றது. அந்த வகையில் நகர்ப்புற பாடசாலைகளில் இவ்வளங்கள் அதிகமாகவோ கிராமப்புற பாடசாலைகளில் இவ்வளங்கள் குறைவாகவும் காணப்படுவதினால் இதனை பயன்படுத்தி கற்க முயலுகின்ற மாணவர்கள் பெரி தும் சிரமப்படுகின்றனர்.

சான்றாக

. 2013 இல் உயர்தரத்தில் அறிமுகப்படத்தப்பட்ட தொழிநுட்ப துறைக்கு அரசாங்கம் 251 பாடசாலைகளுக்கு உபகரணங்களுடன்கூடிய தொழிநுட்ப ஆய்வுகூடங்களை வழங்கியது. 35 பாடசாலைகளில் ஆய்வுகூட வசதிகள் உள்ளபோதிலும் உபகரணங்களில்லை அத்துடன் ஏனைய 94 பாடசாலைகளில் ஆய்வுகூடம் மற்றும் உபகரணங்களின் வசதியற்றநிலை காணப்படகின்றது.

ஆசிரியர் பற்றாக்குறை ஆகும் அதிகளவான ஆசிரியர்கள் காணப்பட்ட நிலையில் தற்போதைய காலங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக ஆசிரியர்கள் அதிகளவானோர் வெளிநாடுகளுக்கு செல்வதனால் ஆசிரியர் ஆளணியில் பாரிய வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது இவ்வாறான ஆசிரியர் பற்றாக்குறையினால்" மாணவர்களின் கற்பித்தல் செயல்பாடானது மோசமான நிலையில் பாதிக்கப்பட்டு வருகின்றது மிக ஆசிரியர்கள் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் கல்வி நிலைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது..

சான்றாக

45000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகின்றது என இலங்கையின் கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது மேலும் வட மத்திய மாகாணத்தில் சுமார்16200 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றது ஆனால் தற்போது 14600 ஆசிரியர்களே காணப்படுகின்றனர் 1600 ஆசிரியர்கள் பற்றாக்குறை என பிரியந்த பெர்ணான்டே கூறியுள்ளார்.

கல்வியில் ஏற்ப்படுகின்ற மற்றுமோர் பிரச்சினையாக காணப்படுவது யாதெனில் கலைத்திட்ட மாற்றம் ஆகும் இலங்கையின் கல்வியில் கலைத்திட்ட மாற்றத்தினால் மாணவர்களுக்கிடையே ஓர் விரக்தி நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டுகளிலும் மாற்றம் செய்யப்படுகின்ற பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கிடையே இப்பாடத் திட்டம் பற்றிய ஒரு தெளிவின்மை ஏற்படுகின்றது. இதனால் மாணவர்களுடைய கற்றல் செயல்பாடுகள் கூட பாதிப்படைகின்றது என்றே கூறலாம். மேலும் இவ்விரக்த்தி நிலையினால் மாணவர்களின் பாடத் தெரிவும் தவறான முறையில் இடம் பெற்று பரீட்சை பெறுபேறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இவ்வாறான பிரச்சனைகளை மாணவர்கள் பாடசாலையில் எதிர் நோக்குவதனால் தங்களுடைய கல்வியினை தொடர்ந்து தொடர முடியாத ஓர் நிலை காணப்படுகின்றது ஆகவே மாணவர்களுக்கு கல்வியை சுமையாக திணிக்காமல் அக் கல்வி மூலம் அவர்கள் தங்களுடைய‌‌ வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான‌ திறனை வளர்ப்பதாகவே கல்வி அமைய‌ வேண்டும். உலகை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஆயுதம்கேள்வியாகும் என்ற மண்டேலாவின் கூற்றுக்கு இணங்க. சிறந்த கல்வியினை வழங்குவதனால் அறிவுள்ள ஓர் சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்

சிவானந்தம் சதுஷா

இரண்டாம் வருட சிறப்புக் கற்கை

கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை

கிழக்கு பல்கலைக்கழகம்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.