மன்னிப்பு கேட்பதும், கொடுப்பதும்..

மன்னிப்பு என்ற வார்த்தை, சொல்வதற்கு வேண்டுமென்றால் எளிதாக இருக்கலாம். ஆனால்!, அதைக் கேட்பதும், கொடுப்பதும், அவ்வளவு எளிதல்ல.

பெருஞ் சிக்கல்களையும், சச்சரவுகளையும் கூட ஒரே விநாடியில் முடிவுக்குக் கொண்டு வரும் திறமை இந்த வார்த்தைக்கு உண்டு. ஏதாவது தவறு செய்து விட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக் கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று.

“மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிக்கத் தெரிந்தவன் பெரிய மனிதன்“ என்று ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ காணக் கிடைப்பது அரிது.

ஒரு குட்டிக் கதை

“இப்படிக் கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே!. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன்.

ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில ஆண்டுகளாகவே அவள் கோகுலிடம் இப்படித் தான் நடந்து கொள்கிறாள்...

ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வி அடைந்த போது இப்படித் தான் அவனைத் திட்டி விட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடி விட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைக் கைதவறி உடைத்தாலும் இப்படித் தான்...

முதலில் அவன் செய்தது தவறு என்று கண்டித்து விட்டு, பிறகு மன்னித்து விடுவதாகச் சொல்லி விடுவாள் ரேவதி...

“ஏன் ரேவதி!, கோகுல் செய்யுற தப்புகளை எப்படியும் மன்னிக்கத் தான் போறே. பிறகு எதுக்காக அவன் கிட்டே அது தப்புன்னு சொல்லித் தேவையில்லாம குற்ற உணர்ச்சியைத் தூண்டி விடுறே...?” - ரேவதியைத் தனியாக அழைத்துக் கேட்டான் கணேசன்...

“கோகுல் இப்ப டீன்ஏஜ்ல இருக்கான். இனி மேற்படிப்பு, வேலைன்னு வாழ்க்கையில எத்தனையோ பேரைச் சந்திக்கப் போறான்...

எத்தனையோ சூழல்களை எதிர்கொள்ளணும். இப்ப அவன் செய்யுற தப்புகளை தப்புன்னு நாம தான் சுட்டிக் காட்டணும். அப்ப தான் அதை இனி செய்யாம கவனமா இருப்பான். அதேநேரம் அவனை நாம மன்னிக்கிறோம்னு அவனுக்குத் தெரியணும்...

மற்றும்!, மற்றவங்க அறியாம செய்யுற தப்புகளை அவன் மன்னிக்கவும் கத்துக்குவான். தப்பு செய்யாதவங்க மட்டுமில்லங்க, மற்றவங்களை மன்னிக்கவும் தெரிஞ்சவங்க தான் முழு மன ஆரோக்கியத்தோட வாழ முடியும்...

அதுக்காகத் தான் இந்தப் பயிற்சி! ”இதனைக் கூறிய மனைவி ரேவதியை புருவம் உயர்த்தி மகிழ்ச்சியோடு பார்த்தான்" கணேசன்...

ஆம் நண்பர்களே...!

🟡 பொறாமை, பிடிவாதம்,, வாக்குவாதம், புரிதலின்மை, போன்றதால் மன்னிப்பு என்பதே மறைந்து வருகிறது. பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக் கொள்வதற்கு தன்மானம் இடம் கொடுப்பது இல்லை...!

🔴 நம் தவற்றை மற்றவர்கள் சுட்டிக் காட்டும் போது அது உண்மையாக இருந்தால், அதை நேர்மையாக ஒப்புக் கொள்வோம். அது நம்மைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்...!!

⚫ மிருகத்திற்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடே அவர்களுக்குள் மற்றவர்களின் சிறிய தவறுகளை மன்னித்து மறப்பது தான். மன்னிப்பு கேட்போம்...! மனதாரக் கொடுப்போம்...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.