சளி உருவாவது எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

நம் அனைவருக்குமே வாழ்வில் ஒருமுறையாவது சளி பிடித்திருக்கும், சளி வந்துவிட்டாலே இருமல், தொண்டை வலி, நெஞ்சு பகுதியில் அசௌகரியம், காய்ச்சல் என ஒரு சிலருக்கு தீவிரமாய் விடும்.

📌 இது ஏன்? ஒவ்வொரு நபருக்கும் இப்படி மாறுபடுவது ஏன்? என்று நாம் யோசித்திருப்போமா?

ஒரு சிலருக்கு வீட்டு வைத்தியத்தின் மூலம் குணமாகும் சளி, சிலருக்கு மருந்து ஊசிகளின் மூலம் குணமாகும்.

இந்த பதிவில் நாம் சளி எப்படி உருவாகிறது? சளி என்றால் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

📌 சளி என்பது என்ன?

நம் உடலின் மூக்கு, தொண்டை, நுரையீரல் பகுதிகளில் Mucus membrane என்ற அமைப்பு இருக்கிறது, இதனையே நாம் கோழைப்படலம் என்று அழைக்கிறோம்.

இந்த படலமானது மியூசின் எனும் திரவத்தை சுரக்கிறது, சாதாரணமாக பளிங்கு போன்று இருக்கும் இந்த திரவம் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டது.

இதன் முக்கிய பணியே சுவாச மண்டலம் வறண்டு விடாமல் தடுப்பது தான், நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள தூசிகள், கிருமிகள் இதில் ஒட்டிக்கொள்ளும் போது சுத்தமான காற்று மட்டும் நுரையீரலுக்குள் செல்லும்.

இது வழமையான ஒன்று தான், ஒருவேளை காற்றில் கிருமிகள் அதிகம் இருந்தால் மியூசின் திரவம் அதிகளவில் சுரக்கும்.

கிருமிகளுடன் எதிர்த்து போராடும், இதன் முடிவில் இறந்து போன கிருமிகள் கோழைப்பட செல்கள் மியூசின் திரவத்தில் கலந்து சளியாக வெளியேறும்.

இப்படித்தான் உருவாகிறது சளி, கிருமிகளின் தாக்கத்தை பொறுத்து சளி பழுப்பு நிறமாகவோ, மஞ்சள் நிறமாகவோ மாறுகிறது.

இதை வெளியேற்ற வேண்டுமே தவிர, உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்வது சிலருக்கு பாதிப்பை அதிகரிக்க செய்யலாம்.

ஆகவே சளி என்பது ஒருவகையில் நல்லது தான்!! சளி பிடித்துவிட்டால் அதை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை கையாளுங்கள், ஆரோக்கியமான வீட்டு வைத்தியத்தின் மூலம் எளிதில் சரிசெய்துவிடலாம்.

தொந்தரவுகள் அதிகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவரை நாடுவதே சிறந்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.