நேரத்தின் மீது பழி போடாதீர்கள்...!

யானை மீது செல்லும் போது, நாய் கடிக்கக் கூடும் என்று முன்பே தீர்மானித்து விட்டால், என்ன செய்வீர்கள்...? கீழேயே பார்த்துக் கொண்டு செல்வீர்கள்...

அப்படிப் பார்வையை நேராக வைக்காமல், கீழே நோக்கி வைத்திருந்தால், எதிர்பாராமல், அந்த உயரத்தில் ஏதோ ஒரு மரக்கிளை உங்களை மோதலாம்...

கீழே தூக்கி எறியப்படலாம், அங்கே ஒரு நாய் மீது நீங்கள் விழலாம். அது மிரண்டு போய் உங்களைக் கடிக்கலாம் அல்லவா...!

இந்த சிக்கலான சங்கிலித் தொடர் நிகழ்வுகளை விதி, தலையெழுத்து!, கர்மா,சகுனம், வாஸ்து என்று சொல்லி தப்பிக்கப் பார்க்காதீர்கள். அப்படியெல்லாம் எதுவும் கிடையாது...

மரக்கிளை உங்கள் மீது வந்து மோதவில்லை. நீங்கள் தான் ஒழுங்காக கவனமில்லாமல், மரக்கிளையின் மீது சென்று மோதி, நாய் மீது விழுந்தீர்கள்...

நீங்கள் அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின் விளைவு இருக்கத்தான் செய்கிறது...

உங்கள் கவனமின்மையால் நேர்ந்த நிகழ்வை, அது சரியில்லை,இது சரியில்லை, எல்லாம் விதி,இது என் பூர்வ ஜென்மக் கர்மா என்று இல்லாதவற்றின் மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறீர்கள்...

உங்களை நாய் கடிக்கவில்லை. கவனமற்ற உங்கள் முட்டாள்தனம் தான் நாய் கடியில் கொண்டு போய் உங்களை விட்டுள்ளது...

உங்கள் தவறை ஏற்க மனமில்லாமல், நேரத்தின் மீது பழி போடுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அனுபவத்தில் மோசமான நேரம், நல்ல நேரம் என்பதே கிடையாது, உழைக்காமல், சோம்பேறியாக வெறுமனே இருப்பது தான் கெட்ட நேரம்...

ஆம் நண்பர்களே...!

எனக்கு அதைச் செய்ய நேரமில்லை. இதைச் செய்ய நேரமில்லை என்று நேரத்தின் மீது பழி போட்டு தப்பிக்காதீர்கள்...!

செய்ய வேண்டிய செயலை விழிப்புணர்வுடன், சரியான நேரத்தில் செய்து முடியுங்கள்...!!

நம் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அற்புதமாகத் தான் இருக்கிறது, அதை மோசமாக்கிக் கொள்வதும், நல்லவையாக்கிக் கொள்வதும் நம்முடைய எண்ணத்திலும், செயலில் தான் இருக்கிறது...!!!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.