எடை இழப்புக்கு உதவும் நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் ஏராளமாக உள்ளன என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருக்கிறோம்.

நெல்லிக்காயின் ஊட்டச்சத்து மதிப்பின் காரணமாக இது சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக நெல்லிக்காய் சாறு, சட்னி, காய்கறி, ஊறுகாய் மற்றும் இன்னும் பிற வகைகளில் சமைக்கப்பட்டு உட்கொள்ளப்படுகின்றது.

எனினும் நெல்லிக்காய் கொண்டு உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றொரு வழியும் உள்ளது.

தினமும் காலையில் நெல்லிக்காய் நீரை குடித்து வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

❇️ நெல்லிக்காயில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லை. இதில் புரதம், கார்போஹைட்ரேட்ஸ், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் நிறைந்துள்ளன.

அதில் சர்க்கரை மிகக் குறைவாகவே உள்ளது. ஆகையால் இது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

❇️நெல்லிக்காய் நீர் தயாரிப்பது எப்படி?

நெல்லிக்காய் தண்ணீர் தயாரிக்க முதலில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும்.

இந்த தண்ணீரை ஒரு கரண்டியால் நன்கு கலக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கடைசியாக அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பானமாக குடிக்கவும்.

📌 நெல்லிக்காய் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

❇️ எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்


நெல்லிக்காயில் அமினோ அமிலம் ஏராளமாக காணப்படுகிறது. இதன் உதவியுடன் உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக, வயிறு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது. இதுவே நெல்லிக்காய் நீர் எடையைக் குறைக்கும் பானமாகக் கருதப்படுவதற்குக் காரணம்.

❇️ நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் பல நோய்கள் ஏற்படலாம். காலையில் எழுந்தவுடன் நெல்லிக்காய் தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.

❇️ தோல் மற்றும் கூந்தலுக்கு நல்லது

நெல்லிகாய் பல வகையான அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுவதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது முகத்தின் அழகை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.

உங்களுக்கு பருக்கள் அல்லது சுருக்கங்கள் பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக நெல்லிக்காய் நீரை குடிக்கவும்.

மேலும் நெல்லிக்காய் வலுவான மற்றும் பளபளப்பான கூந்தலை பெற பயன்படுத்தப்படுகிறது.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.