குங்குமப்பூ நீரை குடித்தால் எடை வேகமாக குறையும் என்பது உண்மையா?

பொதுவாக ஏராளமான சரும பராமரிப்பு பொருள்களிலும் குங்குமப்பூ உட்பொருளாக சேர்க்கப்படுகிறது.

குறிப்பாக குங்குமம் பூ சரியான அளவில் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்படும் பொழுது உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைத்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவி செய்யவதாக கூறப்படுகின்றது.

அதிலும் உடல் எடையை குறைப்பதற்கு குங்குமம் பூ நீர் குடிப்பது நல்லது.

அந்தவகையில் குங்குமப்பூ நீர் எப்படி எடுத்து கொள்வது? இது எவ்வாறு உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்பதை பார்ப்போம்.  

📌தேவையான பொருள்கள்

👉குங்குமப்பூ - 2 மில்லிகிராம்

👉தண்ணீர் - 1 கப்

👉எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

👉தேன் - 1 ஸ்பூன்

📌செய்முறை

ஒரு கப் நன்கு கொதித்த நீரில் 1-2 மில்லி கிராம் அளவு மட்டும் குங்குமப்பூ சேர்த்து ஒரு தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து திறந்து பாருங்கள். நல்ல நறுமணத்துடன் குடிக்கும் நிலையில் குங்குமப்பூ டீ தயாராகி இருக்கும்.

இதை அப்படியே குடிப்பவர்களும் குடிக்கலாம். இதோடு எலுமிச்சை சாறு, தேன் கலந்தும் குடிக்கலாம்.

❇️ எடையை எப்படி குறைக்கும்?

குங்குமப்பூ நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. மேலும் பசியைக் கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கச் செய்து, அடுத்த வேளை எடுத்துக் கொள்ளும் அதிகப்படியான கலோரிகளைக் குறைக்கச் செய்கிறது.

குறிப்பாக உணவு எடுத்துக் கொள்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக இந்த டீயை எடுத்துக் கொள்வதன் மூலம் பசியை கட்டுப்படுத்தி நிரம்பிய உணர்வைத் தரும். இதன்மூலம் அதிகமாக சாப்பிடுவது கட்டுப்படுத்தபட்டு உடல் எடை குறைப்பைத் தூண்டுகிறது. 

எவ்வளவு எடுத்து கொள்ளலாம்?

ஒரு நாளைக்கு 1-2 கப் வரை குங்குமப்பூ டீ எடுத்துக் கொண்டால் போதுமானது.

குங்குமப்பூ டீயை காலையில் ஒரு கப்பும் இரவில் ஒரு கப்பும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டு கப் டீக்கும் சேர்த்து 2-3 குங்குமப்பூ இதழ்களை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.