தனுஷ்கவிற்கு எதிரான வழக்கு - அவுஸ்திரேலிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கின் விசாரணையை அவுஸ்திரேலிய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் அவருக்கு எதிரான வழக்கின் விசாரணையை 2023 பெப்ரவரி 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

போலிஸார் தங்களின் சாட்சியங்களை இறுதி செய்யகூடிய வகையில் இந்த உத்தரவு பிறபிக்கப்படது.

31 வயதான தனுஷ்க, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

இதன் போது டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில், நீதவான் டேவிட் பிரைஸ், இன்று இந்த வழக்கை பெப்ரவரி 23-ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

தனுஷ்க பெப்ரவரியில் நீதிமன்றில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கான கடுமையான நிபந்தனைகள் மற்றும் இரவு நடமாட்ட கட்டுப்பாடு உத்தரவு என்பன தொடர்கின்றன.

அவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள பெண்ணை தொடர்பு கொள்ள அனுமதியில்லை.

மேலும் அவர் சமூக ஊடகங்கள் அல்லது டேட்டிங் செயலிகளை பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவதில்லை.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.