உலகில் மூன்று வகை மனிதர்கள்.

உலகில் மூன்று வகை நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். இன்றைய மனிதர்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தலாம்...

1) நிகழ்காலத்தை நிராகரித்து விட்டு இறந்த காலத்திலே வாழ்பவர்கள். இவர்களுக்கு சுமைகளை இறக்கவும் தெரியாது, சோகங்களில் இருந்து விடுபடவும் தெரியாது...

2) எதிர்காலக் கனவுகளில் நிகழ்காலத்தை இழப்பவர்கள். நாளைப் பற்றியே கவலைப்பட்டு நிகழ்காலத்தை இழக்கிறவர்கள்...

3) வாழ்க்கையை அனுபவித்து வாழும் ரகசியத்தைப் புரிந்து கொண்டவர்கள்...

இன்று புதிதாய் பிறந்தோம் என்ற உற்சாகத்தோடு ஒவ்வொரு விடியலையும் வரவேற்கிறவர்கள், உயிருள்ள, உயிரற்ற அனைத்தையும் நேசிக்கும் நெஞ்சம் வேண்டும். கிடைத்ததை நெஞ்சார வாழ்த்த வேண்டும்...

தன் வாழ்வை அன்பு செய்பவர்களால் மட்டுமே பிறருக்கு உதவி செய்ய முடியும். அதில் மகிழ்ச்சியையும் காண முடியும். நீங்கள் எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறீர்கள் என்பதை விட, உங்களால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்...

நம் இதயத்தைத் நிறைக்கும் உண்மையான மகிழ்ச்சி, அழுவாரோடு அழுவதிலும், சோர்வடைந்து துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதலாக இருப்பதிலும், பிறர் கண்ணீரைத் துடைப்பதிலும் இருக்கிறது...

ஆம் நண்பர்களே...!

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மரம் உதவுகிறது நிழல் தந்து...!

புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....!!

ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட....!!!

ஆறறிவு உள்ள மனிதர்களான நாம் முடிந்த அளவு பிறர்க்கு அவர்கள் கேட்காமலே அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவி செய்ய வேண்டும்...!

உடுமலை சு. தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.