நாட்டுக்கு வரவுள்ள இரண்டாவது சொகுசு கப்பல்!

வரும் 5 ஆம் திகதி மற்றொரு சொகுசு கப்பலான MV Azamara Quest வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் அறிவித்துள்ளது.

Mein Schiff 5 இன் வருகைக்குப் பின்னர், MV Azamara Quest இந்த ஆண்டு ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் நிறுத்தப்படும் இரண்டாவது பயணக் கப்பலாக இது மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை Mein Schiff 5 இல் இருந்து பயணிகள் கொழும்பு, யால தேசிய பூங்கா, உடவலவை வனவிலங்கு பூங்கா மற்றும் முல்கிரிகல வரலாற்றுப் பாறைக் கோவிலுக்குச் சென்றனர்.

மேலும் புந்தல தேசிய பூங்கா, ஹம்பாந்தோட்டை தாவரவியல் பூங்கா, காலி மற்றும் கதிர்காமம் ஆகியவை Mein Schiff 5 பயணிகளின் மத்தியில் பிரபலமான இடங்களாக இருந்ததாகவும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.