மரணத்தை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால்!

கொலஸ்ட்ரால் என்பது உடலுக்கு நல்லது ஆனால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது உடலில் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது உடலுக்கு நல்ல பலன்களை கொடுக்கும், கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்க விடாமல் பார்க்க வேண்டியது அவசியம்.

பெரும்பாலும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது புகைபிடித்தல், உடலுழைப்பின்மை மற்றும் உடல் பருமன் போன்றவற்றால் அதிகரிக்கிறது.

எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க மருந்துகள், உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளில் மாற்றம் சிலவற்றை கடைபிடிக்கலாம்.

பெரும்பாலும் உடலில் அதிகளவில் கொலஸ்ட்ரால் இருப்பது வெளிப்படையான அறிகுறிகளை காண்பிக்கவில்லை, ஒருவருக்கு கொலஸ்ட்ரால் இருப்பது ரத்த பரிசோதனையின் மூலம் மட்டுமே தெரிய வருகிறது.

இருப்பினும் சில அறிகுறிகளை கூர்மையாக கவனிப்பதன் மூலம் நமது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது என்பதை கண்டறியலாம்.

📌 கொலஸ்ட்ராலை ஏற்படுத்தும் காரணிகள்.

1) மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம்.

2) அதிக எடை அல்லது உடல் பருமன்.

3) அதிகளவில் உடல் செயல்பாடு இல்லாமல் இருத்தல்.

4) புகைபிடித்தல் மற்றும் அதிகமான குடிப்பழக்கம்.

5) வயது காரணமாக கல்லீரல் பலவீனமடைவது அதிக கொலஸ்ட்ராப்களுக்கான காரணமாகும்.

📌 கொலஸ்ட்ராலை குறைக்கும் வழிகள்

1) பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை சாப்பிட வேண்டும் மற்றும் உப்பு அதிகம் சேர்க்காமல் உண்ணவேண்டும்.

2) ஆரோக்கியமான கொழுப்புகளை சாப்பிட்டும், விலங்கு கொழுப்புகளை குறைவாகவும் சாப்பிடவேண்டும்.

3) உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான எடையில் இருக்க வேண்டும்.

4) புகைபிடிப்பதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.

5) தினமும் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

6) அதிகளவில் மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

7) மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்க வேண்டும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶




No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.