ஒவ்வொரு விநாடியும் உங்களுடையது.

ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு வாழ்க்கையாகத் தான் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஏதோ ஒரு இலக்கை அடையும் பயணத்தின் வழித் தங்கல் அல்ல.. ஒவ்வொரு நாளும்; அந்த நாளே ஓர் இலக்கு தான்.

சற்று சிந்தித்துப் பாருங்கள், குறிப்பிட்ட அதுவும் தீர்மானிக்கப்படாத ஆண்டுகள் தான் உங்களது தற்போதைய வாழ்நாள்.

அது நாற்பது ஆண்டுகளோ!, அல்லது எழுபது ஆண்டுகளோ! அந்த ஆண்டுகளின் எந்த ஒரு விநாடி கடந்தாலும், அதனை மீட்டெடுக்க இயலாது.

"நல்ல வாழ்க்கை என்பது ஒரு விநாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு விநாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும்...

மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த விநாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது...

ஒரு விநாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அதுதான் உண்மையான நல்ல வாழ்க்கை"...

மறு விநாடி உறுதியில்லாத இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு விநாடியையும் பொருளுள்ளதாக வாழ்ந்தாலே போதுமானது. ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ந்து வாழ வேண்டும்...

தகாத செயல்களைச் செய்து கொண்டு, பல ஆண்டுகள் வாழ்வதை விட, குற்றமற்ற தூய செயல்களைச்  செய்து கொண்டு, ஒரு விநாடி வாழ்வதே சிறந்த வாழ்க்கை...!

நம் வாழ்கையை யாரோ ஒருவர் வாழ இயலாது, நாம் தான் வாழ்ந்தாக வேண்டும், இந்த விநாடியில் வாழுங்கள் இந்த விநாடி உங்களுடையது...

இந்த விநாடியில் நீங்கள் மகிழ்வாக இருங்கள், ஏனென்றால் நாளை என்பது உறுதியானது இல்லையே...!

உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருங்கள், 

நீங்கள் இந்த விநாடியை முமுமையாக அனுபவியுங்கள்...

ஆம் நண்பர்களே...!

உலகின் மிக உன்னத புதையல் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு  விநாடிகள் தான். அப்படியிருக்க, அந்தத் தருணங்களை வெறுப்பு, சினம்,  என்று செலவழிப்பானேன்...?

கொண்டாடுங்கள்...!

உங்கள் சூழல் என்னாவாக இருந்தாலும் ஒவ்வொரு விநாடிகளையும் கொண்டாட உங்கள் மனதைப் பழக்குங்கள்...                  

இனியாவது மகிழ்ச்சியைப் பணத்திலோ, புகழிலோ தேடாமல் , இந்த விநாடியில் வாழுங்கள்...!

இந்த விநாடி உங்களது பொற்கரங்களில் உள்ளது. இனி நீங்கள் மகிழ்வுடன் இருக்க முயற்சி செய்யுங்கள்...

உடுமலை சு. தண்டபாணி 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.