முதன்முறையாக வெளிநாட்டு லீக்கில் விளையாடவுள்ள வியாஸ்காந்த்!

லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) ஜப்னா கிங்ஸ் அணிக்காக விளையாடிய யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் (BPL) விளையாடவுள்ளார்.

LPL தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை சாய்த்து ஜப்னா கிங்ஸ் அணி ஹெட்ரிக் கிண்ணம் வெல்வதற்கு உதவியாக இருந்ததுடன், சிறந்த வளர்ந்துவரும் வீரருக்கான விருதையும் வென்றிருந்தார்.

இந்தநிலையில் வியாஸ்காந்த் தற்போது BPL தொடரில் செட்டகிராம் செலஞ்சரங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய முகாமையாளர் ஷியாம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் ஷியாம் குறிப்பிடுகையில், இளம் வீரருக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த அணிக்கு நன்றியாக உள்ளோம். அங்கு கிடைக்கும் அனுபவம் வியாஸ்காந்திற்கு அதிகமாக உதவும்” என்றார்.

LPL தொடரில் வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட வியாஸ்காந்திற்கு வெளிநாட்டு தொடர் ஒன்றில் விளையாட கிடைக்கும் முதல் வாய்ப்பு இதுவாகும். 

வியாஸ்காந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளபோதும், தொடருக்கு செல்வதற்கான அனுமதி இலங்கை கிரிக்கெட் சபையிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை.

செட்டகிராம் செலஞ்சர்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் மாத்திரமின்றி இலங்கை வீரர்களான விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அஷான் பிரியன்ஜன் ஆகியவர்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளனர். அதுமாத்திரமின்றி வியாஸ்காந்த் உட்பட மொத்தமாக  14 இலங்கை வீரர்கள் BPL தொடரில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BPL தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்.

👉செட்டகிரொம் செலஞ்சர்ஸ் – விஷ்வ பெர்னாண்டோ, அஷான் பிரியன்ஜன், விஜயகாந்த் வியாஸ்காந்த்

👉டாக்கா டொமினேட்டர்ஸ் – சாமிக்க கருணாரத்ன, டில்ஷான் முனவீர

👉குல்னா டைட்டன்ஸ் – அவிஷ்க பெர்னாண்டோ, தசுன் ஷானக

👉ராங்பூர் ரைடர்ஸ் – ஜெப்ரி வெண்டர்சே, பெதும் நிஸ்ஸங்க

👉சில்ஹெட் ஸ்ரைக்கர்ஸ் – கமிந்து மெண்டிஸ், திசர பெரேரா, தனன்ஜய டி சில்வா

👉போர்ச்சுன் பரிஷல் – குசல் ஜனித் பெரேரா, சதுரங்க டி சில்வா

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.