நாடளாவிய ரீதியில் இன்று(8) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்.

தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் ஆகியன இணைந்து இன்றும்(08) எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளன.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் பல பிரிவுகளை சேர்ந்தவர்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை பாதித்துள்ள வரவு செலவுத்திட்ட யோசனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

மேலும் சில நிறுவனங்களின் ஊழியர்கள் தமது உணவு நேரத்தில், தமது பணியிடங்களுக்கு முன்பாக அல்லது தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தமது எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.