7 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மரண தண்டனை

மியான்மரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு இராணுவ  நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது

மியான்மரில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 100-க்கும் மேற்பட்டோருக்கு இராணுவ  நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இராணுவ ஆட்சிக்கு எதிரானவர்களை ஒடுக்குவதற்கு மரண தண்டனையை ஒரு ஆயுதமாக மியன்மார் இராணுவம் பயன்படுத்துவதாக ஐ.நா. குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் மியன்மாரில் பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கு அந்த நாட்டு இராணுவ  நீதிமன்றம்  மரண தண்டனை விதித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. வங்கியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி அவர்களுக்கு இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயமான விசாரணையின் அடிப்படை கோட்பாடுகளை மீறியும், சுதந்திரம் மற்றும் பாரபட்சமின்மைக்கான முக்கிய நீதித்துறை உத்தரவாதங்களுக்கு முரணான வகையிலும் இராணுவம் இரகசிய கோர்ட்டுகள் நடவடிக்கைகளை தொடர்கிறது.

மாணவர்களுக்கு மரண தண்டனை விதித்திருப்பது இராணுவத்தின் பழிவாங்கும் செயலாகும். 7 மாணவர்கள் தவிர்த்து 4 இளைஞர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களுடன் சேர்த்து இதுவரை 139 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.