WhatsApp-ல் Forward செய்யும் போது இருந்த முக்கிய குறை.. இனி இருக்காது!

வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஃபார்வேட் (Forward) என்கிற ஒரு விருப்பம் அறிமுகமான நாளில் இருந்தே, அந்த அம்சத்தில் இருக்கும் ஒரு முக்கியமான குறை - ஒருவழியாக - தற்போது தீர்க்கப்பட உள்ளது!அதென்ன குறை? அது சரிசெய்யப்பட்ட பின்னர் ஃபார்வேட் அம்சத்தில் ஏற்பட போகும் மாற்றம் என்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

❇️ பலரும் கவனிக்காத ஒரு குறை!

வாட்ஸ்அப்பின் ஃபார்வேட் அம்சத்தில் உள்ள ஒரு குறையை பற்றி சொன்னால்.. நம்மில் பலரும் - 'அட ஆமாம்ல!' என்று ஆச்சரியப்படலாம். 

அந்த அளவிற்கு மிகவும் கவனிக்கப்படாத ஒரு குறையாகவே அது உள்ளது!வாட்ஸ்அப்பில் வழியாக உங்களுக்கு கிடைத்த ஒரு போட்டோ அல்லது ஒரு வீடியோவை வேறு ஒருவருக்கு ஃபார்வேட் செய்யும் போது. அதற்கு உங்களால் எந்த கேப்ஷனும் கொடுக்க முடியாது - தெரியுமா?

❇️ இனிமேல் அந்த குறை இருக்காது!

வாட்ஸ்அப் வழியாக, வெறும் ஒரு சில கிளிக்குகளில் ஒரு போட்டோவையோ அல்லது ஒரு வீடியோவையோ ஃபார்வேட் செய்துவிட முடியும் என்றாலும் கூட அதற்கு எந்த விதமான தலைப்பையும் கொடுக்க முடியாமல் இருந்தது, பயனர்களுக்கு ஒரு பெரிய குறையாகவே இருந்தது.

தற்போது அந்த குறை தீர்க்கப்பட உள்ளது. அதாவது மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், ஃபார்வேட் செய்யப்படும் போட்டோ அல்லது வீடியோவிற்கு கேப்ஷனை சேர்க்கும் விருப்பத்தில் பணியாற்றி வருகிறது!

வாட்ஸ்அப்பில் வரப்போகும் அம்சங்களை பற்றி புட்டுப்புட்டு வைப்பதில் கில்லாடியான WABetaInfo வலைதளத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் பீட்டாவிற்கான லேட்டஸ்ட் வெர்ஷனை (2.2245.5) வெளியிட்டுள்ளது.

அதில் ஃபார்வேட் செய்யப்படும் போட்டோ மற்றும் வீடியோவில் கேப்ஷன் சேர்க்கும் விருப்பம அணுக கிடைக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது பீட்டா அப்டேட்டின் ஒரு பகுதியாகும். அதாவது இந்த அம்சம் அனைத்து டெஸ்ட் களுக்கும் கிடைக்காது!

❇️ எப்போது அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வரும்?

நீங்கள் பீட்டா சேனலில் இல்லாத வாட்ஸ்அப் பயனர்கள் என்றால் - இந்த அம்சத்தை பெறுவதற்கு - கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.இந்த அம்சம், கண்டிப்பாக அனைவருக்கும் வரும் என்பது உறுதி, ஆனால் சரியாக எப்போது வரும் என்கிற டைம்லைன் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை!

டெஸ்க்டாப்பிற்கான லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனில் மட்டுமின்றி, ஐஓஎஸ்-க்கான லேட்டஸ்ட் பீட்டா வெர்ஷனிலும் (22.23.0.72) கூட இந்த அம்சம் அணுக கிடைக்கிறதுஐஓஎஸ் டெஸ்ட் ஃப்ளையிட் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்கள், ஆப்பை அப்டேட் செய்த பிறகு போட்டோஸ், வீடியோஸ், GIFஸ் மற்றும் டாக்குமெண்ட்களை பார்வேட் செய்யும் போது கேப்ஷன்களை பயன்படுத்த முடியும்.

ஆனால் டெஸ்க்டாப்பிற்கான பீட்டா வெர்ஷனை போலவே, ஐஓஎஸ் பீட்டாவில் உள்ள அனைவருக்கும் - உடனடியாக - இந்த அம்சம் அணுக கிடைக்காது. இது அனைவருக்கும் வர இன்னும் கொஞ்சம் காலம் எடுக்கலாம்!

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.