கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகள் மின் கட்டணத்தை செலுத்தவில்லை – இ.மி.ச.

சுகாதார அமைச்சு மற்றும் கொழும்பிலுள்ள பல வைத்தியசாலைகள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிறுவனங்களிடமிருந்து சபைக்கு செலுத்த வேண்டிய மொத்தத் தொகை 400 மில்லியன் ரூபாவாகும்.

சுகாதார அமைச்சு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு பல் வைத்தியசாலை, கொழும்பு கண் வைத்தியசாலை, காசல் வீதி மகளிர் வைத்தியசாலை, பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, தேசிய இரத்த மாற்று நிலையம் உள்ளிட்ட பல நிறுவனங்களிடமிருந்து இந்தத் தொகை சேகரிக்கப்பட வேண்டியு்ளளது.

இந்த நகரத்தில் உள்ள அனைத்து சுகாதார நிறுவனங்களும் மாதாந்தம் 100 மில்லியன் ரூபா மின்சாரக் கட்டணத்தைப் பெறுவதாக இந்த ஆதாரங்கள் வெளிப்படுத்துகின்றன.

இந் நிலுவைத் தொகையை வழங்குமாறு மின்சார சபை பல சந்தர்ப்பங்களில் இந்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.