காலநிலை தொடர்பான நடவடிக்கைகளில் தாமதம்; ஜனாதிபதி விமர்சனம்




காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பயனுள்ள தீர்வுகளை வழங்கக்கூடிய நாடுகள் அவ்விடயத்தில் நேரடியாக தலையிடாவிட்டால் மனித குலத்தின் எதிர்கால இருப்பை தக்கவைத்துக்கொள்வதில் அச்சுறுத்தல் ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல்மயப்படுத்தலும் காலதாமதமுமே COP27 மாநாட்டின் வெற்றிக்கு மிகப்பெரும் தடை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

COP27 உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய சேதத்திற்கு வரலாற்று ரீதியாக பொறுப்புக்கூற வேண்டிய நாடுகள் மற்றும் அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கக்கூடிய நாட்டு தலைமைகள் சமூகமளிக்காமையானது, காலநிலை தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இடம்பெற்று வரும் பேரழிவுகளை வரும் முன்னரே தடுப்பதற்காக 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவி எனும் இலக்கை அடைவதனை கருத்திற்கொண்டு நாம் முயற்சி செய்ய வேண்டுமெனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலநிலை மாற்றத்திற்கான உலகளாவிய செயற்திட்டங்களை வலுப்படுத்துவதற்கான ஒரு வருட பணிக்கான ஒப்புதல் முத்திரையாக இது இருக்க வேண்டும் என்பதுடன், ஆற்றல் துறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கும் ஆரம்பமாக வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநாட்டில் பங்கெடுக்கும் தரப்பினருடன் தொடர்புடைய வகையில், COP28 இல் நிலைபேண்தகு முன்னேற்றம் காணப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால், COP அமைப்பை கலைப்பதே சிறந்ததென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.