பல நோய்களை விரட்டி அடிக்கும் வாட்டர் செஸ்ட்நட்

 

குளிர் காலத்தில் சத்தான காய்கறிகள் பழங்களை எடுத்து கொள்ள வேண்டும். இதில் வாட்டர் செஸ்ட்நட், அல்லது சிங்காரா என்று அழைக்கப்படும் பழம் அதிக சத்துக்களை கொண்டுள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

இந்தப் பழம் எவ்வளவு ருசியாக இருக்கிறதோ, அதே அளவு பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.

குறிப்பாக ஆண்களுக்கு சிங்காரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

✴️உண்ணும் முறை

இதனை வெறும் பழமாக மட்டும் உண்ணப்படாது இந்தப் பழத்தை காயவைத்து, அதை மாவாக அரைத்தும் பயன்படுத்துவார்கள்.இந்த மாவு மிகவும் சத்து மிக்கது. விரதங்களின் போது ​​வட இந்தியர்கள் பெரும்பாலும் சிங்காரா மாவில் செய்யப்பட்ட உணவுகளையே சாப்பிடுகிறார்கள் என்று கூறப்படுகின்றது.

சிங்காரா பழத்தில் கொழுப்புச் சத்தே கிடையாது. இதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மிகவும் பயனளிக்கிறது.

✴️ சத்துக்கள்

இதில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், புரதம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின், தாமிரம் என நமக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  

சிங்காரா பழத்தை அப்படியே சாப்பிடலாம் அதை வேகவைத்தோ அல்லது சுட்டோ சாப்பிடலாம். காய வைத்து மாவாகவும் பயன்படுத்தலாம். சிங்காராவின் மாவு, அரிசி மாவைப் போலவே இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

உடலில் உள்ள தைராய்டு அளவை பராமரிப்பதில் சிங்காரா என்ற நீர் கஷ்கொட்டை மிகவும் பயன் அளிக்கிறது. இதில் இருக்கும் கணிசமான அளவு அயோடின் தைராய்டை சரியான அளவில் பராமரிக்கிறது.

அதேபோல உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் சோடியம் சத்தின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விளைவைக் குறைக்கும் நீர் கஷ்கொட்டை என்பது இதன் முக்கியமான மருத்துவ குணம் ஆகும்.

இதன் ஊட்டச்சத்து மதிப்பும் மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நீர் கஷ்கொட்டையை உண்பதால், உடலில் கட்டி உருவாவதும், வளர்வதும் தடுக்கப்படுகிறது. கணுக்காலில் வெடிப்பு இருந்தால், சிங்காராவை உணவில் சேர்த்துக் கொண்டால் அது நிவாரணம் அளிக்கிறது.

சிங்காரா இதயத்திற்கு உகந்த பழம். இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, சிங்காராவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.

வைட்டமின் பி6 நிறைந்துள்ள சிங்காரா எனும் சீர் கஷ்கொட்டை, மனநிலையை மேம்படுத்தும். இந்தப் பழத்தை சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைக்கிறது.

இறந்த செல்களை சரிசெய்து வீக்கத்தைக் குறைக்கும் டையோஸ்மெடின், லுடோலின், ஃபிசெடின் மற்றும் டெக்டோரிஜினின் உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நீர் கஷ்கொட்டையில் உள்ளன என்று கூறப்படுகிறது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.