முடி உதிர்விற்கான காரணமும் தடுக்கும் முறைகளும்.

முடி உதிர்தல் என்பது அலோபீசியா என்று அழைக்கப்படுகிறது. இவை தலையில் முடி உதிர்வை ஏற்படுத்தும் அதுவே நோய் தீவிரமானால் புருவத்திலுள்ள முடிகள் கூட உதிர்ந்துவிடும்.

முடி உதிர்விற்கு முக்கிய காரணம்

முடி உதிர்விற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் மற்றும் வைட்டமின் டி3, பி, பி12, இரும்பு அல்லது ஃபெரிடின் அளவுகள் குறைவாக இருந்தாலும் பிசிஓடி, டைபாய்டு, டெங்கு, மலேரியா மற்றும் கோவிட் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

ஒருவரது டயட்டில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்ட்டாலும் முடி உதிர்வு ஏற்படும்.அதிகமாக தலைக்கு ஷாம்பு பயன்படுத்தினால் தலைமுடி உதிரும் என்று கூறப்படும்.இவ்வாறான நிலையில் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் ஷாம்பூ பயன்படுத்தினால் முடி உதிர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இயற்கையாகவே தலையில் எண்ணெய் உற்பத்தியாகிறது இந்த எண்ணெயுடன் வியர்வை அழுக்கு அல்லது மாசுபாடு ஆகியவற்றுடன் இணைந்தால் அழுக்குகள் சேர்ந்து பொடுகு உருவாகும் இதனை சுத்தம் செய்யாவிட்டால் பொடுகு அதிகரித்துக்கொண்டே செல்லும் இறுதியில் இது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

தலைக்கு தினமும் ஷாம்பு பயன்படுத்தி சுத்தம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கருத்தடை மருந்துகள், இரத்த உறைதல் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வலிப்பு நோய்க்கான மருந்துகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வு ஏற்படும் மற்றும் மனநிலைக் கோளாறுகள் இருந்தாலும் சிலருக்கு முடி உதிர்வு ஏற்படும்.

உச்சந்தலையில் பூஞ்சை தொற்று, சொரியாசிஸ், டிஎல்இ மற்றும் அடோபிக் டெர்மடிடிஸ் போன்றவை இருந்தால் சருமம் பாதிப்படையும்.ஒரு நாளைக்கு சுமார் 50-100 முடி உதிர்வது இயல்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1) அகலமான பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி தலை சீவலாம், ஒவ்வொரு நாளும் தலைமுடியை சீப்பு வைத்து சீவ வேண்டும் அப்படி செய்தால் ரத்த ஓட்டம் அதிகரித்து தலைமுடி வளர்ச்சிக்கு உதவும்.

2) தலைக்கு குளித்தால் தலைமுடியை இயற்கையாக உலர வைக்கவும், ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.பயன்படுத்த விரும்பினால் சூடான ஹேர் ட்ரையருக்கு பதிலாக பிளாஸ்ட் ட்ரையரைத் தேர்ந்தெடுக்கவும்.

3) ரீபாண்டிங், ஸ்மூத்னிங் போன்ற கெமிக்கல் நிறைந்த சிகிச்சைகளைத் தவிர்க்கவும் அல்லது குறைக்கவும்.

4) முடிக்கு அதிகமாக வண்ணம் பூசுவதைத் தவிர்க்கவும் செயற்கையான வண்ணத்தைப் பயன்படுத்தினால் முடி வேர்களில் பாதிப்படையும். விருப்பப்பட்டால் முடியும் வேரிலிருந்து ஒரு அங்குலம் தள்ளி வண்ணம் பூசிக்கொள்ளலாம்.

5) உச்சந்தலையில் எண்ணெய் தடவி இரவு முழுவதும் வைக்கக்கூடாது ஷாம்பு போடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் உச்சந்தலையில் எண்ணெயை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.

6) முடியை அலசுவதற்கு வெந்நீரைத் பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் உண்ணும் உணவில் அதிகளவில் புரதங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.