மூடப்படும் டுவிட்டர் நிறுவனத்தின் அலுவலகங்கள்.

டுவிட்டர் நிறுவனத்தின் அனைத்து அலுவலக கட்டடங்களும் தற்காலிகமாக மூடப்படும் என்றும், உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அதன் ஊழியர்களிடம் டுவிட்டர் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி திங்கட்கிழமை அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று அதன் ஊழியர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணம் வெளியிடப்படவில்லை.

ஏராளமான ஊழியர்கள் டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து வெளியேறுகிறார்கள் என்ற செய்திகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இரகசிய தகவல்களை ஊடகங்கள் அல்லது வேறு இடங்களில் விவாதிப்பதை தவிர்க்குமாறு டுவிட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், டுவிட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், அந்நிறுவன ஊழியர்களுக்கு மற்றொரு மின்னஞ்சல் செய்தியை அனுப்பியுள்ளார்.

டுவிட்டர் ஊழியர்கள் அதிக அர்ப்பணிப்புடன் ஒரு நாளைக்கு அதிக மணிநேரம் வேலை செய்ய வேண்டும், இல்லையெனில் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் ஊழியர்கள் இது தொடர்பான உறுதிமொழியை வழங்க சம்மதிக்க வேண்டும் என மஸ்க் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த உறுதிமொழிக்கு உடன்படாத ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கி சேவையிலிருந்து வெளியேறப்படுவர் என்று மஸ்க் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.