கோவிட் மரணங்களில் அதிகரிப்பு! அரசாங்கத்திடம் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இல்லை. ஹேமந்த ஹேரத்.

 

அண்மைய வாரங்களில் மீண்டும் எழுச்சி பெற்று வரும் கோவிட் வைரஸ் தொற்றுக்கு இந்த வாரம் மாத்திரம் எட்டு மரணங்கள் பதிவாகியாகியுள்ளன

எனினும் வரவிருக்கும் வாரங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கருத்தில் கொண்டு வெளிநாட்டினரின் வருகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உட்பட எந்தவொரு தடுப்பு விதிமுறைகளையும் சுகாதார அதிகாரிகள் விதிக்க மாட்டார்கள் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பொது இடங்களில் மக்கள் முககவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது போன்ற கடுமையான சுகாதார விதிமுறைகளை நாங்கள் விதிக்க முடியாது.

சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாயை நாடு நம்பியுள்ளது. வரும் வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் குளிர்கால நாடுகளில் இருந்து வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த வாரம் பதிவான எட்டு கோவிட் மரணங்களின் இறப்புகளில், பெரும்பான்மையானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

மேலும், 150 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

பூஜ்ஜிய கோவிட் கொள்கையை பராமரிக்கும் சீனா, ஆறு மாதங்களில் அதன் முதல் மரணத்தை அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் ஒரு மில்லியன் சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை திட்டமிட்டுள்ளதாக பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதுவர் பாலித கோஹன்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை சுற்றுலாத்துறை

இதற்கிடையில், முக்கியமாக கிழக்கு ஆசியாவிலிருந்து சுமார் 3000 சுற்றுலாப் பயணிகளுடன் மற்றொரு பயணக் கப்பலை நாடு எதிர்பார்க்கிறது.

இலங்கை சுற்றுலாத்துறையின் தகவலின்படி, இந்த மாதத்தில் இதுவரை 40,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி போடலாம் அல்லது போடாமல் இருக்கலாம். பெரும்பாலானோர் முககவசம் அணிய மாட்டார்கள். ஆனால் குறிப்பாக அதிக ஆபத்துள்ள குழுக்களில் இருப்பவர்கள் பொது இடங்களில் முககவசங்கள் அணிவதைத் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதே நேரத்தில் அடிக்கடி கை கழுவுதல், கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் தூரத்தைப் பேணுதல் ஆகியவை அனைவருக்கும் வலுவாக பரிந்துரைக்கப்படுகின்றன வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், மொத்த சனத்தொகையில் பாதி பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், இது மேலும் பலரை பாதிப்படையச் செய்யும் என்று தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

எனவே, வயதானவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாசம் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும், நெரிசலான இடங்களில் முககவசங்களை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொற்று நோய்களுக்கான வைத்தியசாலையின் ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.