வெளிநாட்டில் இருந்து இலங்கையர்கள் அனுப்பும் பணத் தொகையில் அதிகரிப்பு.

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் பணம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இலங்கை மத்திய வங்கி இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.  

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்,  இந்த வருடம் ஒக்டோபர் மாதம் இவ்வாறு வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பிய பணத் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல்கள், 314.4 மில்லியன் டொலராக பதிவாகி இருந்தது.

இந்தநிலையில், கடந்த ஒக்டோபர் மாத வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல்கள், 355 மில்லியன் டொலராக காணப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில், ஏற்றுமதி வருமானம் 9,991 மில்லியன் டொலராகவும், இறக்குமதி செலவு 14,085 டொலராகவும் பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.