உலகக் கிண்ண கால்பந்து போட்டி வெற்றியுடன் தொடங்கிய ஈக்வடோர்

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தொடக்கநாள் ஆட்டத்தில் கட்டார் அணியை வீழ்த்தி ஈக்வடோர் அணி வெற்றியை பதிவு செய்தது.

உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ளும் உலகக் கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடக்க நாள் ஆட்டத்தில் கட்டாரும், ஈக்வடோரும் மோதின. அல்கோர் நகரில் உள்ள அல் பேத் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய ஈக்வடோர் அணியைச் சேர்ந்த என்னர் வேலன்சியா 2 கோல்கள் அடித்து அசத்தினார். இறுதிவரை போராடியும் கட்டார் அணி கோல் எதுவும் அடிக்காததால் ஈக்வடோர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 15-ஆவது நிமிஷத்தில் ஈக்வடோர் வீரா் எனா் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் கட்டார் வீரா் சாத் அல் ஷீபுக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. இதையடுத்து ஈக்வடோருக்கு 16-ஆவது நிமிஷத்தில் வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் ஸ்கோா் செய்து, நடப்பு உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் முதல் கோலை அடித்தாா் வாலென்சியா.

தொடா்ந்து, ஆட்டத்தின் 31-ஆவது நிமிஷத்தில் சக வீரா் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி ஈக்வடோருக்காக 2-ஆவது கோல் அடித்தாா். இவ்வாறாக முதல் பாதி முடிவில் ஈக்வடோர் 2-0 என முன்னிலையில் இருந்தது. அடுத்த பாதியில் கடுமையாகப் போராடியும் கட்டாருக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, இறுதியில் ஈக்வடோர் வெற்றியைப் பதிவு செய்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.