வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம்.. ! பலத்த காற்று - மழை.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டியுள்ள வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்தக் காற்றழுத்தப்பகுதி, நவம்பர் 19ம் திகதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரும் ஏதுநிலை உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும். அதேநேரம் நாட்டின் ஏனையப் பகுதிகளில் சீரான வானிலை நிலவும்.

சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்க முடியும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.