ஆசிரியைகளின் புடவை தொடர்பில் கவனம்.

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவை தொடர்பிள் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாத ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புடவை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் வேறு ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல நேரிட்டுள்ளதாக ஆசிரியைகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இவ்வாறான வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகளை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாள்தோறும் புடவை அணிந்து செல்வதனால் ஏற்படக் கூடிய செலவினை தவிர்க்கவே சில ஆசிரியைகள் வேறும் ஆடைகளை விரும்புகின்றார்கள் போலும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.