கழிவறையில் கூடுதல் நேரம் அமர்வதால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள்!

கழிவறையில் உட்கார்ந்து செல்போனை பார்ப்பது, கேம்களை விளையாடுவது, பேப்பர் படிப்பது போன்ற பழக்கங்கள் பலரிடம் அதிகரித்து வருகின்றது.

10 நிமிடங்களுக்கு மேல் டாய்லெட்டில் செலவிடக்கூடாது என்பதே மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

அதற்கு மேல் கூடுதல் நேரம் செலவிட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து காண்போம்.

செல்போனின் மேற்பரப்பு ஒரு கழிவறையை விட அதிக கிருமிகளை கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், அதை கழிப்பறைக்கு எடுத்து சென்று பயன்படுத்துவதால் அதில் இன்னும் பல மடங்கு கிருமிகள் உருவாகும்.

கழிவறையில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது மூல நோய் ஏற்பட காரணமாக அமையும். ஒரு நபர் தனது நேரத்தை டாய்லெட்டில் எவ்வளவு நேரம் செலவிடுகிறாரோ, அவ்வளவு நேரம் ரத்தம் இந்த மலக்குடல் நரம்புகளில் குவிந்து மூல நோயை ஏற்படுத்தும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இயல்பாகவே சிலர் மலம் கழிக்க அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். அப்படி என்றால் மலம் கழிக்கும் போது தங்களை கஷ்டப்படுத்தி கொள்ளும் வகையில் மலக்குடலில் உள்ள நரம்புகளை அழுத்தும் நேரத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

இதற்காக அதிகம் சிரமப்படாமல் சிறிது நேரம் கழித்து மீண்டும் மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டால் அதை மேற்கொள்ளலாம். 

நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து கொண்டிருப்பது ஆசனவாயில் வலி, வீக்கம் அல்லது ரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். 

சராசரியாக 10 நிமிடங்களுக்கு மேல் கழிப்பறையில் செலவிடுவது ஆசனவாயை சுற்றி இருக்கும் ரத்த நாளங்களையும் வீங்க செய்யும் என்பதை மறவாதீர்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.