கூக்குரல் எழுப்புவதும் ஒரு இயலாமையே.

நாம் சொல்லப் போகும் கருத்து நியாயமானதாக இருந்தாலும் கூக்குரல் எழுப்பிப் பேசும் பொழுது எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அது நமக்கொரு தவறான தோற்றத்தைத் தந்து விடும். குரலினை உயர்த்திப் பேசுவது நல்லதா...? என்று எவரிடம் கேட்டாலும், நல்லது இல்லையென்றே உரைப்பார்கள்.

ஆனால்!, சினம் கொள்ளும் போதும், நாம் கூறிய கருத்தினை மறுத்துப் பேசும் பொழுதும் நம் குரலினை உயர்த்தியே பேச வேண்டிய கட்டாயமும் வருகிறது...

அந்நேரம் இதயத் துடிப்பு அளவுகளைக் கடந்து உயர் மன அழுத்த நிலையால் நாளங்கள் தடித்து, கண்கள் சிவந்து சினத்தின் உயரத்திற்கே நம்மை அறியாமல் சென்று விடுகின்றோம்.

இப்படி நம்மிடம் இடையிடையே நிகழ்வதனால் பல வேண்டாத விளைவுகளும் ஏற்படும். 

இவையெல்லாம் அமைதியாக இருக்கும் பொழுது நமக்கே புரியும்.

ஆனால் இதயத்தின் துடிப்புகள் அளவை மீறும் பொழுது நம் மூளையின் செயல்பாடுகளை சீர்குலைப்பது என எவரும் அறிவதற்கு இல்லை.

குரலினை உயர்த்திப் பேசும் பொழுது நாம் மனிதன் என்ற நிலையை மீறி ஒருபடி கீழே இறங்கிப் போய் விடுகிறோம். 

அப்போது நம் மீது நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது.

அதுவொரு தரக்குறைவான செயல். அமைதியின் சக்தியை எவரும் புரிந்துக் கொள்வதில்லை என்பதே குரலினை உயர்த்திப் பேசக் காரணமாக இருக்கிறது.

அமைதியானவர்களால்தான் எதையும் சாதிக்க முடியும். ‘பொறுத்தவர் பூமியாள்வார்’ என்பார்கள். மாறாக தம் குரலினை உயர்த்தியே பேசுபவர்களால் எதையுமே சாதிக்க முடியாது. 

நம் உயிரின் சக்தியை சேமித்து வைத்துக் கொண்டால் தான் நாம் நினைத்ததை சாதிக்கவியலும்.

உளவியல் முறையாக பார்க்கும் பொழுது அது ஒரு இயலாமை. குரலினை உயர்த்தும் பழக்கம் இடம் பொருள் பார்க்காது.

இவ்வாறு உரக்க ஓலமிட்டு குரலெழுப்புவதால் எவரும் தன்  வலிமையை நிலை நாட்ட இயலாது.

முயற்சித்துப் பார்த்தால் அந்த வாழ்க்கை நோயற்ற நிலையிலும்,  மகிழ்ச்சியானதாகவும், மன நிறைவானதாகவும் இருக்கும்...!

ஆம் நண்பர்களே...!

குரலினை உயர்த்திப் பேசுவது பல நோய்களுக்குக் காரணமாகவும் அமைந்து விடுகிறது. உரக்கப் பேசும்பொழுது சிந்தனையில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நம் கவனமும் சிதறுகிறது.

இந்நிலையில் பல தவறுகள் நிகழ வாய்ப்பும் இருக்கிறது.

உரக்கப் பேசுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. எந்தவொரு  செயலையும் அமைதியாக எதிர்கொள்ளும் போது சிக்கல்கள் எளிதாகி விடும். குரலினை உயர்த்திப் பேசுவதால் அது மேலும் சிக்கலாகி விடும்.

உடுமலை சு.தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.