அமைதி,அமைதி, அமைதி.

அனைத்தும் அமையப் பெற்று எந்தவித தொந்தரவு இல்லாத ஒரு சூழலில் வாழ்வது ஒன்றும் அமைதி அல்ல. அது ஒரு வாழ்க்கையும் அல்ல..

ஓசையில்லாத ஓர் இடத்தில் உட்கார்ந்து யோசிப்பதல்ல. 

“புறச்சூழல்களால் பாதிக்கப்படாமல் இருப்பது தான் உண்மையான அமைதி” 

ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக் கொண்டு வருகிறார்களே, அவர்களிடம் இருப்பது தான் அமைதி..

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும், “எனக்கு நேரும் மான, அவமானத்தை  விட,' நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்குப் பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது கடந்து போய்க் கொண்டு இருக்கிறார்களே…அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி...

சீனாவில் 'அமைதி' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அமைதியான நதி, ஆள் அரவம் இல்லாத பூங்கா, சலனம் இல்லாத குளம், சந்தடி இல்லாத சாலை என்று பல்வேறு ஓவியங்கள் போட்டிக்கு வந்து இருந்தன.

ஆனால் போட்டியை அறிவித்த அரசன், இடி மின்னல், புயல், கடுமையான மழை, மரங்களின் பேயாட்டம், கடலின் சீற்றம், காட்டு விலங்குகளின் கூக்குரல், தலைதெறிக்க ஓடும் மக்கள் காணப்படும் ஓவியத்தைப் பரிசுக்குத் தேர்ந்து எடுக்கிறார். 

“அரசே இதுவா அமைதி?” என்று அமைச்சர் கேட்க.,

“அமைச்சரே! ஓவியத்தைச் சற்று உற்றுப் பாருங்கள். பதட்டமான இந்தச் சூழலிலும் அமைதியாக ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக் கொண்டு இருக்கிறது.

வெளிச்சூழல் எப்படி இருந்தாலும் அமைதியாக அப்பறவை நமக்கு உணர்த்துவது ,

''அமைதி புறத்தில் இல்லை அகத்தில் உள்ளது'' என்று உணர்த்துவது உங்களுக்குத் தெரியவில்லையா? என்ற அரசரிடம் 'ஆம்' என்று ஒப்புக் கொள்கிறார் அமைச்சர்...

புத்தபிரான் அருளியிருக்கிற அற்புதமான வாசகங்கள் நமக்குப் பெரிதும் உதவும். 

'கண்களை மூடுவதற்குப் பதிலாக, மனதை மூட வேண்டும்” என்பார் அவர். நம்மில் பலர் தியானத்திலும் தவத்திலும் கண்களை மூடிக் கொண்டிருப்போம். ஆனால் மனம் திறந்து கிடக்கும். அது ஊர் சுற்றும். அசிங்கங்களை பார்க்கும். மனதை மூடுவது தான் மன அமைதிக்கான வழி.

ஆம் ., நண்பர்களே ..,

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி. 

ஆகவே தொந்தரவுகளை புறம் தள்ளி விட்டு நமக்கான இலட்சியத்தில் உறுதி கொண்டு அமைதியாக சாதனை செய்வோம் .

ஆம் .., அமைதி வெளியே இல்லை ; நம் அகத்தில் தான் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வோம் .......... 

உடுமலை சு.தண்டபாணி

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.