கெஹெலிய உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத் தடை.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வௌிநாட்டு பயணத் தடை விதித்தது. 

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணத்தை பயன்படுத்தி GI குழாய்களை கொள்வனவு செய்து, வேறு தேவைகளுக்கு பயன்படுத்திய சம்பவம் தொடர்பான குற்றப்பத்திரிகையை கையளித்து உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் சந்திரபால லியனகே, முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று  குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.

குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்ட பின்னர், குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை, 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, விசாரணை முடியும் வரை அவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தார்.

இந்த வழக்கு பெப்ரவரி முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.