வாரிசு நடிகருக்கு கோலாகலமாக இடம்பெற்ற திருமணம்.

நவரச நாயகன் நடிகர் கார்த்திக் இன் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கெளதம் கார்த்திக் , என்னமோ ஏதோ, வை ராஜா வை , முத்துராமலிங்கம், ரங்கூன், தேவராட்டம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு தேவராட்டம் படத்தில் இணைந்து பணியாற்றிய கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மஞ்சிமா மோகனின் பிறந்தநாளில், தனது வாழ்த்துகள் மூலம் அவருடனான காதலை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். அத்துடன் நவம்பர் 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

 திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ள நிலையில் பலரும், திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.  




✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.