ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விஷேட அறிவிப்பு.

இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், நேற்று (21) பெண் ஆசிரியைகள் குழுவொன்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில், அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னவிடம், ´அத தெரண´ வினவியபோது, ​​அரச அலுவலகங்களில் பணிபுரிய வரும் ஊழியர்கள் தொடர்பிலேயே குறித்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பெண் ஆசிரியைகளின் ஆடை தொடர்பான தீர்மானம் கல்வி அமைச்சினால் எடுக்கப்படும் எனவும் அது அரச நிர்வாக அமைச்சுக்கு பொருந்தாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.