சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று.

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,656 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகின் முதல் கொவிட்-19 வைரஸ் தொற்று சீனாவின் வுஹான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொவிட் வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. 

கொவிட் தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் தற்போது படிப்படையாக கொவிட் தொற்றில் இருந்து மீண்டு வருகின்றன. 

இந்நிலையில் சீனாவில் கடந்த சில நாட்களாக கொவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அங்கு 29,157 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இது கடந்த பல மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிக பாதிப்பு எண்ணிக்கை ஆகும். 

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் சீனாவின் உள்ளூர் நகரங்களில் 31,656 பேருக்கு கொவிட் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 27,646 பேருக்கு அறிகுறி இல்லாத கொவிட் தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு கொவிட் வைரஸால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. 

சீனாவில் இதுவரை கொவிட் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆகும். மேலும் சீனாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொவிட் பாதிப்புகளின் எண்ணிக்கை 2,97,516 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

By T. SARANYA

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.