தொழுநோயாளிகளில் 13% பாடசாலை மாணவர்கள்!

𝑰𝑻𝑴 ✍️ நாட்டில் சிறுவர் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொழுநோய் முகாமையின் பணிப்பாளர் டொக்டர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ கடந்த வருடம் முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 250 சிறுவர் தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

𝑰𝑻𝑴 ✍️ நாட்டில் தொழுநோயாளிகள் அதிகரிப்பதற்கு கடந்த 3 வருடங்களாக நோயாளர்கள் அடையாளம் காணப்படாமையே காரணம் எனவும் இது தொடர்பில் அரசாங்கத்தின் பொறுப்புள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ மேலும், கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படாத தொழுநோயாளிகள் இருக்கும் சூழ்நிலை காணப்படுவதால், அவர்களைக் கண்டறிந்து சிகிச்சைக்காக அனுப்பும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ.எம்.ஐ.கே. வன்னிநாயக்க தெரிவித்தார்.

𝑰𝑻𝑴 ✍️ இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் 124 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

𝑰𝑻𝑴 ✍️ நாடளாவிய ரீதியில் இனங்காணப்பட்டுள்ள தொழுநோயாளிகளில் சுமார் 13 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் எனவும் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.