வீதி விபத்துகளில் 1,459 பேர் உயிரிழப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
வீதி விபத்துகளில் 1,459 பேர் உயிரிழப்பு.

2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகள் காரணமாக 1,459 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 1,387 பாரிய வீதி விபத்துக்களில் 1,459 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த விபத்துகளில் 3,326 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 4,309 சிறு விபத்துகளும், 2,229 விபத்துக்களில் சொத்துக்களுக்கான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

 எவ்வாறாயினும், இந்த நாட்களில் திடீரென வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்ததினால் விபத்துக்கள் மிகக் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/IiHP5Ox https://ift.tt/j9DGV8l 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/fBLgWRQ

 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/IHw4Jzm 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/BmsznPj
https://ift.tt/jeDK7lh

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.