11 ஊடகவியலாளர்களும் உள்ளிட்ட 103 பேருக்கு காயம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
11 ஊடகவியலாளர்களும் உள்ளிட்ட 103 பேருக்கு காயம்!

அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர். 

அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் 05 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றிரவு (09) ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் பலரையும் தாக்கினர். 

அவர்களில், ´அத தெரண´ மற்றும் ´சிரச´ செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்துள்ளார். 

தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/IPU35jp https://ift.tt/Zwero2d 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Rc3bTMy

 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/H4yM3Ni 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/bovkJUF
https://ift.tt/Kn6INv4

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.