இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (10) முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.

 இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று (001) காலை பெருநாள் தொழுகை நடைபெறுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம், நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது. 

தியாகம், அர்ப்பணிப்பு, கொடை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஹஜ் பெருநாளை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுவது உண்டு. 

தம்மிடமுள்ள, தமக்குப் பிடித்தமான அனைத்தையும் படைத்த இறைவனின் நற்கருணையை மட்டும் எதிர்பார்த்து, ஏழை, எளிய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தியாக மனப்பான்மையை ஊக்குவித்து, அதனைக் கொண்டாடும் வகையில் ஹஜ் பெருநாள் முஸ்லிம்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. 

ஹஜ் பெருநாளின் போது முஸ்லிம்கள் அளிக்கும் குர்பானி நன்கொடையும் ஏழை மக்களின் மகிழ்ச்சியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடைகளில் ஒன்றாகும். 

முஸ்லிம்களின் ஐந்தாம் கடமையான ஹஜ் கடமையுடன் இணைந்ததாக கொண்டாடப்படும் ஹஜ் பெருநாள், ஹஜ் கடமையின் இறுதி நாளாகவும் அமைந்துள்ளது.

 ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் I.T.M MEDIA வின் மனமார்ந்த பெருநாள் நல்வாழ்த்துக்கள். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/IPU35jp https://ift.tt/Zwero2d 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/Rc3bTMy 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/H4yM3Ni 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/bovkJUF
https://ift.tt/Kn6INv4

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.