வரலாற்றில் இன்று ஜூலை 14.2022

 வரலாற்றில் இன்று ஜூலை 14.2022

சூலை 14  கிரிகோரியன் ஆண்டின் 195 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 196 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 170 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

1223 – இரண்டாம் பிலிப்பு இறந்ததை அடுத்து அவரது மகன் எட்டாம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.

1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிசு மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றினர்.

1791 – இங்கிலாந்துத் திருச்சபைக்கு எதிரானவர்கள் மீது கலவரம் ஆரம்பித்ததை அடுத்து, பிரெஞ்சுப் புரட்சியின் ஆதரவாளரான சோசப்பு பிரீசிட்லி பர்மிங்காமில் இருந்து வெளியேறினார்.

1798 – அமெரிக்க அரசைப் பற்றி அவதூறாகவோ, பொய்யாகவோ எழுதுவது, பிரசுரிப்பது குற்றமாக ஐக்கிய அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டது.

1814 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பில் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]

1874 – சிகாகோவில் ஏற்பட்ட தீ விபத்தில் நகரின் 47 ஏக்கர்கள் அழிந்தது. 20 பேர் உயிரிழந்தனர். 812 கட்டடங்கள் சேதமடைந்தன.1889 – பாரிசில் கூடிய சோசலிசத் தொழிலாளர்களின் “பன்னாட்டுத் தொழிலாளர் நாடாளுமன்ற” நிகழ்வுகளில் பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் பங்கேற்றனர். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி வேலை-நேரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என முடிவாகியது.

1900 – சீனாவுக்கு எதிரான எட்டு நாடுகள் கூட்டணி தியென்சினைக் கைப்பற்றியது.

1933 – செருமனியில் நாட்சி கட்சி தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1938 – அவார்ட் இயூசு உலகைச் சுற்றி 91-மணி நேரத்தில் விமானத்தில் பறந்து உலக சாதனையை ஏற்படுத்தினார்.[2]

1948 – இத்தாலியின் கம்யூனிசக் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி நாடாளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.

1958 – ஈராக்கியப் புரட்சி: ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அப்துல் கரீம் காசிம் நாட்டின் புதிய தலவரானார்.

1965 – மரைனர் 4 விண்கலம் செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் இடம்பெற்ற தீவிபத்தில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

1967 – நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1969 – ஒந்துராசு காற்பந்து அணி எல் சால்வடோர் அணியிடம் தோற்றதை அடுத்து, ஒந்துராசில் சல்வதோர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகக் கலவரம் வெடித்தது.

1976 – கனடாவில் மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டது.

1995 – எம்பி3 பெயரிடப்பட்டது.

1995 – இலங்கை இராணுவத்தினரின் முன்னேறிப்பாய்தல் நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் புக்காரா ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.

2015 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் புளூட்டோவுக்கு அண்மையாக முதல் தடவையாக சென்றது.

2016 – பிரான்சில் நீசு நகரில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 86 பேர் உயிரிழந்தனர், 400 பேர் காயமடைந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்

1854 – மகேந்திரநாத் குப்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் சீடர் (இ. 1932)

1862 – கஸ்டவ் கிளிம்ட், ஆத்திரிய ஓவியர் (இ. 1918)

1913 – ஜெரால்ட் ஃபோர்ட், ஐக்கிய அமெரிக்காவின் 38வது அரசுத்தலைவர் (இ. 2006)

1918 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடியத் திரைப்பட இயக்குநர் (இ. 2007)

1920 – எசு. பி. சவாண், இந்திய அரசியல்வாதி (இ. 2014)

1925 – க. பசுபதி, ஈழத்து முற்போக்கு இடதுசாரி இலக்கியவாதி, கவிஞர் (இ. 1965)

1929 – வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியலாளர் (இ. 2016)

1935 – ஐ-இச்சி நெகிழ்சி, சப்பானிய வேதியியலாளர்

1938 – அனுருத்த ரத்வத்தை, இலங்கை அரசியல்வாதி (இ. 2011)

1942 – கா. காளிமுத்து, தமிழக அரசியல்வாதி (இ. 2006)

1943 – ரோகண விஜயவீர, இலங்கைப் புரட்சியாளர் (இ. 1989).

1947 – நவின்சந்திரா ராம்கூலம், மொரிசியசின் 3வது பிரதமர்.

1954 – சரத்குமார், தமிழகத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி.

1967 – ஹசான் திலகரத்ன, இலங்கைத் துடுப்பாளர்.

1968 – மைக்கேல் பால்மர், சிங்கப்பூர் அரசியவாதி.

1969 – அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2012).

1973 – கனகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

1987 – சாரா கேனிங், கனடிய நடிகை.

இன்றைய தின இறப்புகள்

1827 – அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1788)

1951 – நவும் இதெல்சன், சோவியத்-உருசிய வானியலாளர் (பி. 1885)

1963 – சுவாமி சிவானந்தர், இந்து சமய அத்வைத வேதாந்த குரு (பி. 1887)

2004 – சுவாமி கல்யாண் தேவ், இந்தியத் துறவி (பி. 1876)

2008 – சுசுமு ஓனோ, சப்பானியத் தமிழறிஞர் (பி. 1919)

2015 – எம். எஸ். விஸ்வநாதன், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1928)

2017 – மரியாம் மீர்சாக்கானி, ஈரானியக் கணிதவியலாளர் (பி. 1977)

இன்றைய தின சிறப்பு நாள்

பாஸ்டில் நாள் (பிரான்சு)

குடியரசு நாள் (ஈராக்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.