543 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

543 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு 


உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாடு கடற்பிரதேசத்தில் இருந்து 543 கிலோ கிராம் கேரளக் கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

 இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சாவின் மொத்த பெறுமதி 120 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் ​நேற்று வழமை போல உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சின்னப்பாடு - பெரியபாடு கடற்பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

 இதன்போது, கடலில் சில பொதி செய்யப்பட்ட சில மூடைகள் மிதந்துபொண்டு வருவதனை அவதானித்த கடற்படையினர் அதனை கைப்பற்றி பார்வையிட்டுள்ளனர். இதன்போதே, கேரளக் கஞ்சா இருப்பது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து கடலில் மிதந்து வந்த அனைத்து பொதிகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

173 மூடைகளில் ஒரு கிலோ வீதம் அடைக்கப்பட்டிருந்த 543 கிலோ கிராம் (ஈரமான எடை) கேரளக் கஞ்சா பொதிகள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

 மேற்படி கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட குறித்த கேரளா கஞ்சாவை கடல்மார்க்கமாக இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்த சந்தேக நபர்கள், அதனை கரைக்கு கொண்டு வர முடியாமல் கடலிலேயே வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என தாம் நம்புவதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். 

மேற்படி பேரளக் கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டமையை அடுத்து, சின்னப்பாடு - பெரியபாடு பகுதியில் கடற்படையினர் மேலதிக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும், கைப்பற்றப்பட்ட கேரளக் கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். புத்தளம் நிருபர் ரஸ்மின் 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/8VvNIoH https://ift.tt/SLkVhlv 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/7nrlMBE
https://ift.tt/ItwD73F

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.