எரிபொருளின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க திட்டம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 எரிபொருளின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க திட்டம்! 


நாடு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், தற்போது அமைச்சர் பதவியிலிருக்கும் ராஜபக்சவின் மகன் பாரிய எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். 

ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன்,நாடு இவ்வளவு நெருக்கடியில் இருக்கும் வேளையில் தற்போது அமைச்சராக இருக்கும் ராஜபக்சவின் மகன் ஒருவரும் எரிபொருள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும், நாட்டில் தொடரும் நெருக்கடி காரணமாக ஜூலை முதல் வாரத்திற்குள் நாட்டை முழுமையாக மூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது இலங்கையில் இந்தியாவின் தலையீடு தீவிரமாகியுள்ளமையினால் மன்னாரில் உள்ள நான்கு எண்ணெய்க் கிணறுகளையும் இந்தியாவிற்கும், கச்சத்தீவுக்கும் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/8VvNIoH https://ift.tt/SLkVhlv

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/7nrlMBE
https://ift.tt/ItwD73F

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.