இன்றைய தினம் அரச பணியாளர்களுக்கு விசேட விடுமுறை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்றைய தினம் அரச பணியாளர்களுக்கு விசேட விடுமுறை.


அரச பணியாளர்களுக்கு இன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பொது நிர்வாக அமைச்சினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. 

அதன்படி , இன்றைய தினம் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதற்கமைய , வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தமது சேவைகளை இன்று வழங்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நாளை பூரணை விடுமுறை தினம் என்பதால் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகம் மூடப்படவுள்ளது. இருப்பினும் , எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வெளிவிவகார அமைச்சின் தூதரக அலுவலகத்தின் சேவைகள் வழமைப்போல் முன்னெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அதன்படி , அரச அலுவலகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அதன் பிரதான காரியலயமும் ஏனைய பிராந்திய அலுவலகங்களும் வழமை போன்று இன்று திறக்கப்படும் என குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் சரத் ரூபசிங்க தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/3tg2bOh https://ift.tt/VkKjFo1 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/QzYsewL
https://ift.tt/XHu27o9

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.