அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடை..!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடை..!

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிக்கவும் மாற்றுப் போக்குவரத்து முறைகளை பயன்படுத்துவதற்கு வசதியாகவும், அரச அலுவலகங்களுக்கு சமூகமளிக்கையில் சீருடைக்கு பதிலாக வசதியான ஆடையில் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்பட வேண்டுமென பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன தெரிவித்துள்ளார். நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அனைவரும் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில், அரச சேவையை, இணையவழி அரச சேவையாக (E ´Public Service) மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. காகித பயன்பாட்டை மட்டுப்படுத்த இந்த இணையவழி தொழில்நுட்பம் முக்கியமானது. இந்த நேரத்தில் நாட்டுக்காக ஒரு டொலரையேனும் சேமிப்பதற்கு அனைத்து பிரஜைகளும் உறுதியாக இருக்க வேண்டும். அத்துடன், நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் நெருக்கடியால் எதிர்காலத்தில் உணவுப் பொருட்களிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு வீட்டுத்தோட்டத்திலும், பொது நிலங்களிலும், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான காணிகளிலும் பயிரிடுவதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்க அதிபர்கள் உடனடியாக வகுக்க வேண்டும் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்) ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/fQH2C3n https://ift.tt/7Jbajzn #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/4FmqCkb
https://ift.tt/oRQpn8H

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.