அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் - நீதியை பெற்றுத்தருவதாக உறுதி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அட்டுலுகம சிறுமி கொலைச் சம்பவம் - நீதியை பெற்றுத்தருவதாக உறுதி.

பண்டாரகம – அட்டுலுகமவில் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார். இதன்படி ,ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார். சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் கொல்லப்பட்டமை இதுவரையில் மர்மமாக உள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை. இருப்பினும் இன்று இடம்பெறுகின்ற மரண பரிசோதனையின் பின்னர் பல தகவல்கள் வெளியாகும் என விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இத்துடன் குறித்த பகுதியில் உள்ள பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. பண்டாரகம – அட்டுலுகமவை சேர்ந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். 9 வயதான குறித்த சிறுமி நேற்றுமுன்தினம் முதல் காணாமல் போயிருந்தார். நேற்று முன்தினம் முற்பகல் தமது வீட்டிலிருந்து 250 மீற்றர் தொலைவில் உள்ள கடைக்கு சென்ற குறித்த சிறுமி மீண்டும் வீடு திரும்பியிருக்கவில்லை. பின்னர் அவரது பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடளித்தனர். பொலிஸாரால் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதோடு அதிலிருந்து கடைக்கு சென்று சிறுமி வீடு திரும்பும் காட்சிகள் பெறப்பட்டன. சிறுமியின் வீட்டிலிருந்து 150 மீற்றர் தொலைவில் எந்த சி.சி.ரி.வி காணொளி காட்சிகளும் காணப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்தநிலையில் நேற்று பிற்பகல் சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம், அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் ஹொரணை பதில் நீதவான் மற்றும் நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நீதவான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். அதனையடுத்து சிறுமியின் சடலம் மரண பரிசோதனைகளுக்காக பண்டாரகம வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்தநிலையில் இன்று மரண பரிசோதனை இடம்பெறவுள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/nEdGrQK https://ift.tt/6VaCAh2 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/rbvqAkP
https://ift.tt/NBiqoI5

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.