40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊழியர்களை மிரட்டி வாடிக்கையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்ள மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்தார். அந்த நிரப்பு நிலையங்களுக்கு கோரப்பட்டுள்ள அனைத்து எரிபொருளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்திலேயே இவ்வாறான அதிகளவான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது இதுவரை 5 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ள ஆதரவு வழங்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாம்புடுன்ன தெரிவித்துள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/3oCsfIu https://ift.tt/KOBAybX #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/CSm8HAP
https://ift.tt/Bf4slik

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.