May 21, 2022 at 10:33AM

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பிரதமர் பதவியிலிருந்து ரணில் விரைவில் நீக்கப்படுவார்! ஹிருணிகா இன்னும் ஓரிரு மாதங்களில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகிய பின்னர் ஜி.எல்.பீரிஸ் போன்ற ஒருவர் பிரதமராக வருவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும், ராஜபக்சக்களின் பாதுகாப்பின்மையும் குறையும் வரை தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இம்முறை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போதிலும், எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/GLxkfzT https://ift.tt/qSjwR2A 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/kYAmWR0 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/xy96u0g 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/fyU9one
https://ift.tt/ytCDvS5

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.