மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகும் பொலிஸ் அதிகாரிகள்!

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜராகும் பொலிஸ் அதிகாரிகள்!


றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகளை இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் றம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு சம்பவம் இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளது.

றம்புக்கனையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் நாரண்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷான் என்பவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

https://chat.whatsapp.com/JTJYUyANNtKKF4wgxF9vC7

https://chat.whatsapp.com/Fmlmh691mW06cQBwW4Ompz

#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.