சீமெந்து மற்றும் இரும்புக் கம்பிகளின் விலைகளும் அதிகரிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
சீமெந்து மற்றும் இரும்புக் கம்பிகளின் விலைகளும் அதிகரிப்பு!

சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திகளுக்கான விலையை அதிகரித்துள்ளன. இதற்கமைய சுமார் 1,500 ரூபாவாக காணப்பட்ட ஒரு மூடை சீமெந்து தற்போது 1,850 தொடக்கம் 1,900 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சந்தையில் விற்பனை செய்யப்படும் ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களுக்குள் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு தொன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கமைய 

👉10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 

👉12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 

👉16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி காரணமாக மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதோடு எதிர்காலத்தில் குறித்த கம்பிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/L4bmYkT
https://ift.tt/cq9UL8v

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.