ஐ.பி.எல் ஏலம் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை எடுத்துள்ளது - முழு விவரம் ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
ஐ.பி.எல் ஏலம் ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை எடுத்துள்ளது - முழு விவரம் ஐ.பி.எல். மெகா ஏலம் நேற்று தொடங்கியது.

இஷான் கிஷன், அவஷே் கான், தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், பெர்குசன், ஷ்ரேயாஸ் அய்யர், பிரசித் கிருஷ்ணா போன்ற வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஏலம் போனார்கள்.

 இன்று 2-வது நாள் ஏலம் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியிடம் இருக்கும் தொகை 1. சென்னை சூப்பர் கிங்ஸ் 20.45 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 

2 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது. 

2. டெல்லி கேப்பிடல்ஸ் 16.5 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 

4 வெளிநாட்டு வீரர்களுடன் 13 பேரை எடுத்துள்ளது. 

3. குஜராத் டைட்டன்ஸ் 18.85 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 

4 வெளிநாட்டு வீரர்களுடன் 10 பேரை எடுத்துள்ளது. 4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12.65 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 3 வெளிநாட்டு வீரர்களுடன் 9 பேரை எடுத்துள்ளது. 5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 6.9 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது. 6. மும்பை இந்தியன்ஸ் 27.85 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 8 வீரர்களை எடுத்துள்ளது. 7. பஞ்சாப் கிங்ஸ் 28.65 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது. 8. ராஜஸ்தான் ராயல்ஸ் 12.15 கோடி ரூபான் தன்வசம் வைத்துள்ளது. 3 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது. 9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 9.25 கோடி ரூபாய் கைவம் வைத்தள்ளது. 4 வெளிநாட்டு வீரர்களுடன் 11 பேரை எடுத்துள்ளது. 10. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20.15 கோடி ரூபாய் தன்வசம் வைத்துள்ளது. 2 வெளிநாட்டு வீரர்களுடன் 13 பேரை ஏலம் எடுத்துள்ளது. ஒவ்வொரு அணியும் எடுத்துள்ள வீரர்கள் விவரம்: ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் எடுத்துக் கொள்ளலாம். மொத்த எண்ணிக்கை 25-ஐ மிகாமல் இருக்க வேண்டும்.

 1. சென்னை அணியில் ஏற்கனவே நான்கு பேர் தக்கவைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய ஏலத்தில் தேஷ்பாண்டே, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், கே.எம். ஆசிப், பிராவோ, ராபின் உத்தப்பா ஆகியோரை ஏலம் எடுத்தது.

 2. டெல்லி கேப்பிட்டல்ஸ் ஷர்துல் தாகூர், மிட்செல் மார்ஷ், முஷ்டாபிஜுர் ரஹ்மான், கே.எஸ். பரத், டேவிட் வார்னர், குல்தீப் யாதவ், அஷ்வின் ஹெப்பர், நாகர்கோடி, சர்பராஸ் அகமது ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 3. குஜராத் டைட்டன் நூர் அகமது, ஜேசன் ராய், முகமது ஷமி, ராகுல் டெவாட்டியா, அபிநவ் ஷதரங்கானி, லூக்கி பெர்குசன், சாய் கிஷோர் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஷிவம் மவி, ஷெல்டன் ஜேக்சன், பேட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 

5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அவேஷ் கான், டி காக், மார்க் வுட், மணிஷ் பாண்டே, ஹோல்டர், தீபக் ஹூடா, குருணால் பாண்ட்யா, அங்கித் சிங் ராஜ்பூட் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 6. மும்பை இந்தியன்ஸ் பாசில் தம்பி, முருகன் அஷ்வின், தெவால்ட் பிரேவிஸ், இஷான் கிஷன் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 

7. பஞ்சாப் அணி ஜிதேஷ் ஷர்மா, ஷாருக் கான், பேர்ஸ்டோவ், ஹர்ப்ரீத் ப்ரார், தவான், இஷான் பொரேல், காகிசோ ரபடா, ராகுல் சாஹர், பிராப்சிம்ரன் சிங் ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. 8. ராஜஸ்தான் ராயல்ஸ் கே.சி. கரியப்பா, ரியான் பராக், டிரென்ட் பவுல்ட், அஸ்வின், சாஹல், ஹெட்மயர், பிரசித் கிருஷ்ணா, தேவ்தத் படிக்கல் ஆகியோர் ஏலம் எடுத்துள்ளது. 

9. ஆர்.சி.பி. டு பிளிஸ்சிஸ், அனுஜ் ராவத், ஹேசில்வுட், ஆகாஷ் தீப், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், வனிந்து ஹசரங்கா ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. எ 10. சன்ரைசர்ஸ் ஐதராபத் நிக்கோலஸ் பூரன், ஜெசதீஷா சுசித், ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி. நடராஜன், பிரியம் கார்க், அபிகேஷக் ஷர்மா, ராகுல் திரிபாதி ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/LvYboQD
https://ift.tt/mq3W8Af

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.