இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ரூ.5,000 கொடுப்பனவைக் கோருகின்றனர்!

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ரூ.5,000 கொடுப்பனவைக் கோருகின்றனர்!

ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் சம்பள உயர்வு, 2018 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் உத்தியோகத்தர்களின் சம்பளம் திருத்தம் மற்றும் சம்பள நிலுவைத் தொகையை வழங்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்கு தீர்வை கோரி வருவதாக சங்கத்தின் தலைவரான சேபால லியனகே தெரிவித்தார்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு தலையிடாவிடின் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

5,000 ரூபா கொடுப்பனவானது சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்த போதிலும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் கொவிட் -19 தொற்றுநோயின் போது தங்கள் சொந்த பாதுகாப்பை பொருட்படுத்தாமல் தங்கள் கடமைகளை நிறைவேற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.